வீட்டு பீரோல இருக்குற பாதி பொருள இதுல வச்சுடலாம்! ஹோண்டா எலிவேட் காரின் இவ்வளவு பெரிய பூட் ஸ்பேஸா?

சமீபத்தில் வெளியான ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரில் அந்த செக்மெண்டிலேயே அதிகமான பூட் ஸ்பேஸ் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் பூட் ஸ்பேஸ் மிக முக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில் ஹோண்டா எலிவேட் காரில் உள்ள இந்த அம்சம்‌ அந்தக் காரின் அதிகமான விற்பனைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மிட்-சைஸ் எஸ் யூ வி கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குடும்பத்துடன் வெளியூர் செல்லவும் அதிக பொருட்களை எடுத்துச் செல்லவும் இந்த ரக கார்கள் தான் மக்களுக்கு வசதியாக இருக்கிறது. இதனால் பலர் மிட்-சைஸ் எஸ்யூவி காரை வாங்கவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை உணர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக மிட்-சைஸ் கார்களை மார்கெட்டில் களம் இறக்கியுள்ளன.

honda elevate big boot space

இந்நிலையில் இந்திய மார்கெட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹோண்டா நிறுவனம் தனது எஸ்யூவி காரை களம் இறக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த காரும் மிட்-சைஸ் ரக எஸ்யூவி கார் தான். இந்த கார் வரப்போவதாக அறிவிக்கப்படும்போதே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஹோண்டா நிறுவனம் இந்த காரை வடிவமைக்கப்படும்போது இந்த செக்மெண்டில் பூட் ஸ்பேஸ் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தது. இதனால் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட காராக இந்த காரை வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்து. இந்த செக்மெண்டிலேயே வேறு எந்த காரிலும் இல்லாத அளவிற்கு பூட் ஸ்பேஸ் வசதியை இந்த காரில் வழங்கியுள்ளது.

honda elevate big boot space

மார்கெட்டில் இதற்கு முன்னர் எம்ஜி அஸ்டார் கார் தான் அதிகபட்சமாக 448 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி கொண்ட காராக இருந்தது. அதிகமாக விற்பனையாகும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களில் 433 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி தான் இருக்கிறது.

மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களில் 373 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது. இதன் ஹைபிரிட் வெர்ஷன்களில் பூட் ஸ்பேஸ் 265 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களில் 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது.

honda elevate big boot space

ஹோண்டா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த எலிவேட் காருக்கு 458 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதற்குச் சான்றாக நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் ஹோண்டா எலிவேட் காரில் பூட் பகுதியில் இரண்டு பெரிய லக்கேஜ் பக்கத்தில் இரண்டு மீடியம் லக்கேஜ் பேக்குகள் மற்றும் ஒரு பேஸ்கட் பால் ஆகியன வைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பூட் ஸ்பேஸ் என்பது பிளாட்டாக இருக்கிறது. ஸ்பேர் வீல் மற்றும் டூல்ஸ் செட் ஆகியன இந்த காரின் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பூட் ஸ்பேஸ் எந்த அளவிற்கு உண்மையிலேயே வசதியாக இருக்கிறது என்பது இந்த கார் விற்பனைக்கு வந்த பிறகுதான் நமக்குத் தெரிய வரும்.

இந்தக் காரின் அளவுகளைப் பொருத்தவரை 4312 மிமீ நீளமும், 1790 மிமீ அகலமும், 1650 மிமீ உயரமும், 2650 மிமீ வீல் பேஸூம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹோண்டா நிறுவனத்தின் இன்ஜின் ஆகும்.

இது 121 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான புக்கிங் விரைவில் துவங்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பூட் ஸ்பேஸ் மிக முக்கியமான தேவை என்பதை அறிந்து செக்மெண்டிலேயே அதிகமான பூட் ஸ்பேஸ் வசதி கொண்ட காராக ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் காரை அறிவித்துள்ளது. இந்த கார் இந்த பூட் ஸ்பேஸ் காரணத்திற்காகவே அதிகமாக விற்பனையாக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 10:27 [IST]
English summary
Honda elevate mid size suv has the largest boot space in the segment
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X