ஹோண்டா எலவேட் கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! பரவாலயே!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இந்த கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த கார் இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.
அனேகமாக வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் இந்த காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். அதை தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலேயே ஹோண்டா எலவேட் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக ஹோண்டா எலவேட் காரின் மைலேஜ் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஹோண்டா எலவேட் காரில் பொருத்தப்பட்டிருப்பது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். ஹோண்டா சிட்டி காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான், ஹோண்டா எலவேட் காரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 15.31 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபக்கம் சிவிடி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 16.92 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா எலவேட் காரின் மைலேஜ் இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த காரில் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஒன்றாகும்.
இதுதவிர 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய வசதிகளும் ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஹோண்டா எலவேட் கார், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கு, ஹோண்டா எலவேட் கடுமையான சவாலை வழங்கலாம்.
இதுதவிர ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கும், ஹோண்டா எலவேட் வடிவில் மிகப்பெரிய போட்டி காத்து கொண்டுள்ளது என்பதே எங்களது கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








