அதிக மைலேஜ் தரும் ஹோண்டா காரின் பெயர் இதுதானா! இந்தியாவில் ஹோண்டாவை தூக்கி நிறுத்த இருக்கும் கார் மாடல்!

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் இந்திய சந்தையில் புதுமுக கார் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நிறுவனம் சமீபத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியது.

அந்த காரை நிறுவனம் 3யுஎஸ் (3US) என்கிற குறியீட்டு பெயரில் அழைத்து வந்தது. இந்த நிலையிலேயே புதுமுக காரின் குறியீட்டு பெயரை நீக்கிவீட்டு அதன் நிஜ பெயரை அறிவித்திருக்கின்றது. எலிவேட் எனும் பெயரையே அதற்கு ஹோண்டா வைத்திருக்கின்றது. இதை புதிய டீசர் படம் வாயிலாக நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

Honda elevate

நிறுவனத்தின் இந்த செயலால் ஹோண்டா இந்தியாவில் புதுமுக காரை விற்பனைக்குக் களமிறக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. உலகளவில் இந்த காரை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. வரும் ஜூன் 6 ஆம் தேதி அன்றே இதன் உலக வெளியீட்டு நிகழ்வு அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் அல்லது அதற்குள்ளாகவே எலிவேட்-இன் அதிகராப்பூர்வ வருகை அமைந்துவிடும் என கூறப்படுகின்றது. ரூ. 10 லட்சம் முதல் ரூ. 19 லட்சம் வரையிலான விலையில் ஹோண்டாவின் புதிய எலிவேட் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சப் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது.

Honda elevate trademark

அந்தவகையில், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கே போட்டியாக அமைய இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பிற ஹோண்டா கார்களைக் காட்டிலும் அதிக சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக இதன் வருகை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்போர்ட்டி தோற்றம், கவர்ச்சிகரமான தொழில்நுட்ப வசதிகள் என பல இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஹோண்டா நிறுவனம் காரை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தியபோது மறைப்புகளுடனேயே அதனை சாலையில் பயன்படுத்தியது. ஆகையால், இது என்ன மாதிரியான தோற்றத்தில், என்ன மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதை எங்களால் துள்ளியமாக தெரிவிக்க முடியவில்லை.

அதேவேளையில், சில அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருப்பது உறுதியாக இருக்கின்றது. அந்தவகையில், மெல்லிய ஹெட்லேம்ப், அதற்கு மேலே எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை இடம் பெற இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் உயர்நிலை தேர்வுகளில் எல்இடி லைட்டுகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர பாடி கிளாடிங், மஸ்குலர் வீல் ஆர்ச்சுகள் மற்றும் குரோம் அக்செண்டுகள் உள்ளிட்ட அம்சங்களும் எலிவேட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றுடன், ஹோண்டாவின் பிரபல கார் மாடல்களான புதிய தலைமுறை டபிள்யூஆர்-வி மற்றும் ஹோண்டா சிட்டி கார்களில் காணப்படக் கூடிய அம்சங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

4.2 மீட்டர் அல்லது 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக எலிவேட் இருக்கும். நவீன கால சிறப்பு தொழில்நுட்ப வசதிகளான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை, கார் இணைப்பு அம்சம், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஏர் ஃபில்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என பற்பல அம்சங்கள் எலிவேட்டில் காணலாம்.

எஞ்ஜினை பொருத்தவரை ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எஞ்ஜின் உடன் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் ஹோண்டா எலிவேட் காரில் வழங்கப்பட உள்ளது. இந்த அம்சம் அதிக மைலேஜிற்கு வழிவகுக்கும்.

ஒரு லிட்டருக்கு சுமார் 27 கிலோ மீட்டர் வரை அது மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், அனைத்திலும் புதிய ஹோண்டா எலிவேட் பெஸ்ட்டானதாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது. ஆகையால், இந்த காருக்கு இப்போதே இந்தியாவில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி ஹோண்டாவின் மூன்று கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன. அமேஸ், சிட்டி 5ஆம் தலைமுறை, சிட்டி இ:எச்இவி ஆகிய மாடல்களே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே விரைவில் எலிவேட் இணைய இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை எங்களுக்கும் பெரிய எதிர் பார்ப்பாக அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 3, 2023, 17:52 [IST]
English summary
Honda elevate name officially confirmed
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+