இந்தியாவே எதிர்பார்க்கும் காரின் விலை இவ்வளவு தானா? சூப்பரான தகவல் வந்துடுச்சு!
ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் காரின் விலை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மார்க்கெட்டில் கிரெட்டா,செல்டோல் உள்ளிட்ட முக்கியமான கார்களுக்கு போட்டியாக களம் இருக்கும் இந்த காரின் விலை அதிக நபர்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது லீக்காகியுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் எலிவேட் என்ற காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவில்லை, இருந்தாலும் இந்த காரின் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்க்கெட்டில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மென்ட் மிக முக்கியமான செக்மெண்டாக பார்க்கப்படுகிறது அதில் ஏராளமான கார்கள் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் தான் இந்த ஹோண்டா எலிவேட் கார் குறித்த விலை விபரங்கள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இந்த விலையை பார்த்து பலர் ஷாக் ஆகி உள்ளனர். இவ்வளவு குறைந்த விலையில் ஹோண்டா எலிவேட் கார் விற்பனைக்கு வர உள்ளதா என தற்போது பரபரப்பாக பேசி வருகின்றனர்.
லீக்கான தகவலின் படி ஹோண்டா எலிவேட் கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வர உள்ளது. இதில் பேஸ் வேரியன்ட் ரூ11 லட்சம் என்ற விலையிலும், டாப் வேரியண்ட் ரூபாய் 22 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த கார் ஹூண்டாய் கிரெக்ட்டாவிற்கு போட்டியாக களமிறங்கும் கார் என்பதால் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த விலை குறித்த விபரம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல இது சமூக வலைதளங்களில் லீக் ஆன விபரங்கள் தான். இந்த காரின் அதிகாரப்பூர்வமான விலை அறிவிப்பு இந்த கார் அறிமுகம் செய்யப்படும் போது வெளியிடப்படும். இந்தக் காரின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதி முதல் இந்த காருக்கான புக்கிங் துவங்குகிறது. செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் போது இந்த காருக்கான டெலிவரியும் துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம். புக்கிங் செய்தவர்களுக்கே முன்னுரிமையாக டெலிவரி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போது இந்த காருக்கான டிவி விளம்பரமும் வெளியாகியுள்ளது.

ஹோண்டா எலிவேட் காரை பொருத்தவரை அதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 119 பிஎச்பி பவரை 6600 ஆர்பிஎம் மேலும் 145 என்னும் டார்க்கை 4300 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா ஹெல்மெட் காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் விலை குறித்த லீக் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அதிகாரப்பூர் தவறுகள் இல்லை என்பதால் இதை யாரும் பெரிதாக நம்ப வேண்டாம், அதிகாரப்பூர்வமான தகவலுக்காக காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications









