ஹோண்டா எலவேட் காரை விலை இந்த தேதியில் தான் தெரியவரும்! எவ்வளவு வரும்னு நினைக்கிறீங்க!

ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் மிட்-சைஸ் எஸ்யூவி கார் கடந்த ஜூன் மாதம் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வரும் செப்டம்பர் மாதம் 4 தேதி அறிவிக்கப்படும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது எஸ்யூவி கார்களை விற்பனையில் இருந்து நீக்கிய நிலையில் மீண்டும் இந்நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்த தனது புதிய காரை தயார் செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நமக்கு தெரியவந்தது.

honda elevate launch date

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்நிறுவனம் தனது எலவேட் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரை முதன்முதலாக காட்சிப்படுத்தியது. இந்த கார் பண்டிகை காலத்தை ஒட்டி இந்தியாவில் அறிமுகமாகும் என பேசப்பட்டது. இந்திய மார்க்கெட்டில் மிட்சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அந்த செக்மெண்டில் புதிய காரை களம் இறக்கி தனது விற்பனையை அதிகரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.

இந்த ஹோண்டா எலவேட் கார் மார்க்கெட்டில் விற்பனையாகும் ஹூண்டாய் கிரெக்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்,எம்ஜி அஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது. இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்தியாவில் வரும் செப்டம்பர் 4 தேதி இருக்கும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

honda elevate launch date

ஹோண்டா எலவேட் கார் 5ம் தலைமுறை சிட்டி கார் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது. சிட்டி காரை போல ஸ்டிராங்க் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இதில் இல்லை. ஸ்டிராங் ஹைபிரிட்டிற்கு பதிலாக எலவேட் எலக்ட்ரிக் கார் 2026 ஆம் ஆண்டு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

ஹோண்டா எலவேட் காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு விடெக் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎஸ் பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இன்ஜினாக உள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது.

honda elevate launch date

எலவேட் காரை தயாரிக்க 90 சதவீதமான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது வெறும் 10% மட்டும் தான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்த காரின் விலை குறைவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை இந்த கார் ரூபாய் 11 லட்சம் முதல் ரூபாய் 18 லட்சம் வரையிலான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சமே இதில் உள்ள பூட் வசதி தான் மொத்தம் 458 லிட்டர் பூத் வசதி இருக்கிறது. இதுதான் இந்த செக்மெண்டிலேயே அதிகம்.

அடுத்ததாக இந்த கார் 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ள காராக இருக்கிறது. மேலும் இதன் வீல் பேஸூம் பெரிதாக இருக்கிறது .இதனால் கேபின் உள்ளே பயணிகளுக்கு அதிகமான இட வசதி கிடைக்கும். உயரமாக இருப்பவர்களும் காருக்குள் அமர்ந்து முட்டியும் தலையும் தட்டாமல் சொகுசாக பயணிக்க முடியும்.

இந்த கார் மற்றும் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது எஸ்பிவிஎஸ் மற்றும் ஜிஎக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மொத்தம் பத்து விதமான கலர் ஆப்ஷன்கள் இந்த காருக்கு வழங்கப்படுகிறது. இதனால் இந்த காருக்கு அதிகமான தேர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும் இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 10.25 சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் வருகிறது. டிரைவருக்கு 7 இன்ச் செம்ம டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் சிங்கிள் ஃபேன் சன்ரூஃப், 6 ஏர் பேக்குகள், அடாஸ் தொழில்நுட்பம் ஆகியன டாப் வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்யூவி காரை களம் இறங்குவதால் அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கார் நல்ல விமர்சனங்களை பெறும் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை வேகமாக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 19, 2023, 20:30 [IST]
English summary
Honda elevate pricing reveal set for september 4th
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X