ஹோண்டா எலவேட் காரின் ரிவியூ வீடியோ... ஒன்னு விடாம எல்லாத்தை பற்றியும் தெரிஞ்சிக்கலாம்!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தையில் நீண்ட காலம் கழித்து கால் தடம் பதிக்க இருக்கின்றது. எலவெட் எனும் கார் மாடலின் வாயிலாகவே இதனை நிறுவனம் செய்ய இருக்கின்றது. மிகவும் அட்டகாசமான வசதிகள் மற்றும் அம்சங்களுடன் இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எங்களுக்கு கிடைத்தது. அதாவது, ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே இந்த வீடியோ வாயிலாக உங்களுக்கு வழங்கி இருக்கின்றோம். காரின் அனைத்து சிறப்புகள் குறித்தும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

எஞ்ஜினை பொருத்தவரை ஹோண்டா எலவேட்டில் 1.5 லிட்டர் ஐவிடெக் டிஓச்எசி பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 119 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆகிய இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் எலவேட் கிடைக்கும்.

Honda elevate video

இந்த காரின் விற்பனை பணிகள் விரைவில் இந்தியாவில் தொடங்கப்பட இருக்கின்றன. செப்டம்பருக்குள் ஹோண்டா எலவேட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த காரின் உற்பத்தி பணிகள் மற்றும் புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 1, 2023, 12:21 [IST]
English summary
Honda elevate review video you can get more details about new suv
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+