ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார் இந்த தேதியில தான் வரப்போகுது! புக் பண்ணப் பணத்தை ரெடி பண்ணுங்க!

ஹோண்டா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யூவி காராக எலிவேட் காரை வரும் ஜூன் 6ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹோண்டாவின் இந்த புதிய எஸ்யூவி கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எஸ்யூவி மார்கெட்டிற்கு இதுவரை யாரும் எதிர்பார்க்காத டிமாண்ட் அதிகமாகியுள்ளது. மக்கள் எஸ்யூவி ரக கார்களையே அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் ஹேண்டா நிறுவனம் இந்த எஸ்யூவி மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஜெயிக்கவில்லை. மற்ற நிறுவனங்கள் இந்த மார்கெட்டை அதிகமாகப் பிடித்துள்ள நிலையில் ஹோண்டா தன் பங்கிற்கு இந்த மார்கெட்டில் போட்டியை உருவாக்க முடிவு செய்தது.

honda elevate SUV launch date

அதன்படி அந்நிறுவனம் புதிதாக ஒரு எஸ்யூவி காரை உருவாக்கியுள்ளது. இந்த எஸ்யூவி கார் குறித்த டீசர் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதில் இந்த காரின் பெயர் எலிவேட் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அந்த புகைப்படம் வெளியான போதே இந்த காருக்கான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் மிகப்பெரிய போட்டி நிலவும் நிலையில் இந்த காரும் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்த கார் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த காரை டாப் ஆங்கிளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாதி கார் மட்டும் தெரியும்படியாக மற்றொரு டீசர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் இந்த காரின் அறிமுகம் குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் 6ம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

honda elevate SUV launch date

தற்போது வெளியான டீசர் புகைப்படத்தில் இந்த எலிவேட் எஸ்யூவி காரின் ஷார்பான டிசைன் அம்சங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது மட்டுமல்ல இந்த காரில் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படவில்லை சாதாரண முன்பக்க சீட்டிற்கான சன்ரூஃப் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இது போக இந்த காரில் ரூஃப் ரயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டனா, பாடி கலர் ஓஆர்விஎம், ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது. பின்பக்கம் எலிவேட் பேட்ஜ் உடன் இணைக்கும் வகையில் எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. தெரிகிறது. இந்த எலிவேட் எஸ்யூவி காரின் ஸ்கேட்ச் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அதில் இந்த காரின் ஷார்ப்பான லுக் தெரிந்தது.

honda elevate SUV launch date

இந்த எலிவேட் எஸ்யூவி காரின் லுக்கை பார்க்கும் போது சிஆர்வி மாடல் காரின் லுக்கில் இருக்கிறது. இதில் ஸ்லிம்மான ஷார்பான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இதன் முன்பக்கம் உள்ள பெரிய கிரில் காரின் லுக்கை மஸ்குலராகவும், ரோட்டில் செல்லும் போது ஒரு கெத்தான லுக்கையும் கொடுக்க வைக்கிறது. இந்த காரில் 16 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்த காரின் உட்புறம் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் நிச்சயம் மார்டனான அம்சங்கள் எல்லாம் இதில் இடம் பெறும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த காரின் இன்ஜின் குறித்த சில தகவல்கள் தெரியவந்துள்ளது. ஹேண்டா நிறுவனம் இந்த காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தப்போவதாகப் பேச்சு எழுந்துள்ளது.

இந்த ஹேண்டா இன்ஜின் தான் புதிய தலைமுறை சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. ஹேண்டா நிறுவனம் சிட்டி இ:எச்இவி காரில் உள்ள அதே ஹைபிரிட் தொழினுட்பத்தை இந்த எலிவேட் காரிலும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.இதன் டாப் வேரியன்ட் மாடலில் அடாஸ் தொழிற்நுட்பமும் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

ஹேண்டா நிறுவனம் சிஆர்-வி மற்றும் டபிள்யூ ஆர்-விக்கு பிறகு எஸ்யூவி காரே இல்லாமல் இருந்த நிலையில் முதல் காராக இந்த எலிவேட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது. தொடர்ந்து இன்னும் சில எஸ்யூவி கார்கள் விற்பனையாக வாய்ப்பு இருக்கிறது. இந்த எலிவேட் கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட நாட்களாக ஹோண்டாவும் எஸ்யூவி செக்மெண்டில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஹேண்டா தனது முதல் படியை எடுத்து வைத்துள்ளது. இதுவே மார்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 15, 2023, 16:00 [IST]
English summary
Honda elevate suv debut on june 6 find full detail
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X