இந்த போட்டோ எல்லாம் பாத்தீங்கன்னா காரை வாங்கியே ஆகனும்னு ஒத்த கால்ல நிப்பீங்க!

நீண்ட கால காத்திருப்பிற்குப் பிறகு ஹோண்டா நிறுவனம் ஒரு வழியாகத் தனது மிட்-சைஸ் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை காணவே பலர் காத்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த கார் குறித்த விரிவான விபரங்களை அதன் புகைப்படங்களுடன் காணலாம் வாருங்கள்.

honda elevate photo gallery 1

ஹேண்டா எலிவேட் மிட்-சைஸ் எஸ்யூவி கார் மார்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த காரில் உள்ள வடிவமைப்பு மற்றும் வசதிகள் குறித்து விரிவாகக் கீழே காண்போம்.

honda elevate photo gallery

இந்த காரின் முகப்பு தேற்றம் பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது. மஸ்குலர் லுக்கில் அக்ரஷிவ்வாகவும் கிளாஸியாகவும் இருக்கிறது. முன்பக்கம் சதுர வடிவிலான க்ரோம் பட்டைவழங்கப்பட்டுள்ளது. அதன் நடுவே ஹோண்டாவின் லோகோ அமைக்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் இருக்கும் பகுதியில் கருப்பு நிற மேட் ஃபினீஷ் பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பரின் கீழ்ப் பகுதி கருப்பு நிற கிளாடிங்கால் கவர் செய்யப்பட்டுள்ளது.

honda elevate photo gallery

இந்த காரின் பின்பகுதி அதே போல்டான டிசைனை கொண்டுள்ளது. இதில் எல்இடி டெயில் லைட்கள் இருக்கிறது. இதன் பின்பக்க பம்பர் பகுதி பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பரின் கீழ் பகுதியில் சில்வர் நிற ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க டிசைன் கிளீனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ட் ஷீல்டில் வைப்பர், வாஷர் மற்றும் சிறிய ஸ்பாயிலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

honda elevate photo gallery

முன்னரே சொன்னது போல ஹோண்டா எலிவேட் காரில் முன்பக்கம் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இது ட்வின் பீம் செட்டப் உடன் இருக்கிறது. மேலும் இதற்கு மேல் திக்கான எல்இடி டிஆர்எல்கள் இருக்கிறது. இது இரவு நேரத்தில் பிரகாசமான ஒளியை தருகிறது. இரவு நேரம் இந்த வெளிச்சமே தயக்கம் இல்லாமல் செல்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

honda elevate photo gallery

பின்பக்கமும் முன்பக்கத்தில் உள்ளதைப் போல எல்இடி லைட் தான் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது பிரேக் லைட் மட்டுமே எல்இடி லைட்டாக வழங்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் ஹலஜன் லைட்கள் தான் வழங்கப்பட்டுள்ளன.

honda elevate photo gallery

உட்புறத்தை பொருத்தவரை எலிவேட் கார் பிரிமியம் லுக் டூயல் டோன் செட்டப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. டேன் மற்றும் கருப்பு நிற தீம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நடுவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சாஃப்ட் டச் லெதர் உடன் பிரிமியம் லுக்கில் டேஷ் போர்டு உருவாக்கப்பட்டுள்ளது.

honda elevate photo gallery

இந்த காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தவரை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இது போட்டி நிறுவனங்களில் உள்ள அதே அம்சத்துடன் தான் இருக்கிறது. மக்கள் பயணிக்கும் போது தங்கள் போனை இந்த இன்ஃபோடெயின்மென்ட் உடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

honda elevate photo gallery

ஹோண்டா எலிவேட் காரின் சீட்டை பொருத்தவரை பெரிய சொகுசான சீட்களாக முன்பக்க சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கமும் பெரிய சொகுசான சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்கள் டேன் நிறத்தில் லெதர் சீட்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்கள் நீடித்த உழைக்கும். காருக்குள் தண்ணீர் சிந்தினாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

honda elevate photo gallery

இந்த ஹோண்டா எலிவேட் காரில் லேன் வாட்ச் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது இடது பக்க இண்டிகேட்டர் ஆன் செய்யப்பட்டது. ஆக்டிவேட் ஆகிவிடும். இடது பக்க கண்ணாடியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகள் இன்ஃபோடெயின்மென்டில் தெரியும். இதனால் பின்பக்கம் வரும் கார்களை பார்த்து லேனை மாற்ற முடியும். இதனால் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.

honda elevate photo gallery

இந்த ஹோண்டா எலிவேட் காரில் வயர்லெஸ் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பயணிக்கும் போது இந்த காரில் சார்ஜர் பகுதியில் போனை வைத்தாலே தானாக சார்ஜ் ஏறும். சார்ஜர் வயரை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இதற்கு நீங்கள் வைத்திருக்கும் போன் வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் போனாக இருக்க வேண்டும்.

honda elevate photo gallery

இந்த காரில் 458 லிட்டர் பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது இதில் அதிகமான லக்கேஜ்களை எடுத்து செல்ல முடியும். 2 பெரிய பெட்டிகள் மற்றும் ஒரு சில சின்ன சின்ன லக்கேஜ்களை தாராளமாக இதில் வைத்துச் செல்ல முடியும் என இந்நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்திலேயே நமக்குத் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 18:21 [IST]
English summary
Honda elevate suv features explained in photo gallery
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X