இந்தியாவே தவம் கிடந்த ஹோண்டா கார் ஷோரூம்களுக்கு வருகை! விலை இவ்ளோதானா! மார்க்கெட்ல பூந்து விளையாட போகுது!
இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக உள்ளன.
இதுதவிர டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு காணப்படுகிறது.

இந்த சூழலில் ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார் கூடிய விரைவில் இந்த செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். வரும் செப்டம்பர் 4ம் தேதி, ஹோண்டா எலவேட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அன்றைய தினம்தான் இந்த காரின் விலை (Price) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ஹோண்டா எலவேட் கார் தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் எலவேட் கார் ஷோரூம்களுக்கு வரும் என ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அது தற்போது நடக்க தொடங்கியுள்ளது. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ஹோண்டா எலவேட் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படலாம். ஹோண்டா எலவேட் காரை முன்பதிவு (Booking) செய்து விட்டு, டெலிவரிக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோண்டா எலவேட் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. செயல்திறனை பொறுத்தவரையில், ஹோண்டா எலவேட் காரில் ஒரே ஒரு இன்ஜின் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 15.31 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், சிவிடி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 16.92 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் லெவல்-2 அடாஸ் (Level-2 ADAS) பாதுகாப்பு தொகுப்பு தொழில்நுட்பம் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை சுமார் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஹோண்டா எலவேட் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் ஆகும். வரும் காலங்களில் இந்த காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு வரலாம் எனவும் நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








