விற்பனைக்கு வரதுக்குள்ளேயே இவ்வளவு புக்கிங்கா? இந்த காரை வாங்க நீங்க தவம் தான் இருக்கனும்!
ஹோண்டா நிறுவனம் தனது எலவேட் என்ற எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் தற்போது இந்த காருக்கான காத்திருப்பு காலம் 4 மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை துவங்கும் முன்பே காத்திருப்பு காலம் அதிகமானதால் இந்த கார் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம்.
ஹோண்டா நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த முடிவு செய்துள்ளது. இதனால் புதிதாக எலவேட் என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது.

இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட முக்கியமான கார்களுக்கு போட்டியாக களத்தில் இறங்குகிறது. ஹோண்டா நிறுவனம் இந்த காரை பிரத்தியேகமாக இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியுள்ளது. இந்த கார் குறித்த அறிவிப்பு வெளியான போதே ஆட்டோமொபைல் பிரியர்கள் எல்லாம் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கிவிட்டனர்.
இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. எஸ்வி,வி, விஎஸ், மற்றும் இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களாக பிளாட்டினம் வைட் பியர்ல், லூனார் சில்வர் மெட்டாலிக், ஆப்ஸிடென் ப்ளூ பியர்ல், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மெட்டராய்டு கிரே மெட்டாலிக், ஃபோனிக்ஸ் ஆரஞ்சு பேர்ல், ஆகிய கலர் ஆப்ஷன்களும்,

சிவிடி வேரியன்ட்களில் மூன்று டூயட் கலர் ஆப்ஷன்களாக ஃபோனிக்ஸ் ஆரஞ்சு பியர்ல் மற்றும் கிறிஸ்டல் ரூஃப், ஒயிட் பால் மற்றும் கிறிஸ்டல் ப்ளாக் பால் ரூஃப், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் ரூஃப் கிரிஸ்டல் பிளாக் பேர்ட் ரூஃப் ஆகிய ஆப்ஷன்கள் வரவுள்ளன.
இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் தற்போது இந்த காரை புக் செய்பவர்களுக்கு 4மாதம் வரை காத்திருப்பு காலம் அதாவது இந்த காரின் டெலிவரி துவங்கியதிலிருந்து 4மாதம் காத்திருப்பு காலம் இருக்கும் என தெரிவிக்கப்படுவதாக தகவல் வெளியாயுள்ளது கார் விற்பனைக்கு வரும் முன்பே காத்திருப்பு காலம் அதிகமானதால் இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியிருக்கிறது இந்த காரை ஏகப்பட்ட பேர் வாங்க ஆவலாக காத்திருக்கிறார்கள்.

எலவேட் எஸ்யூவி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் டிஓஹெச்சி ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் ஹோண்டா சிட்டி காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பிஎஸ் பவரையும் 145.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் சிவிடி ஆகிய கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் மைலேஜ் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த எலிவேட் 15.31 கிலோ மீட்டர் மைலேஜூம் மேனுவல் வேரியண்டிலும் 16.92 கிலோ மீட்டர் மைலேஜை சிவிடி வெர்ஷனிலும் வழங்கும் என தெரிவித்துள்ளது. இது அதிகமான மைலேஜ் ஆகும்.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை ஹுண்டாய் கிரெக்டாவை விட பெரிய காராக இருக்கிறது. இது 4312மிமீ நீளமும் 1790 மிமீ அகலமும் 1650 மிமீ உயரமும் 220 மிமீ கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பூட்ஸ் ஸ்பேஸை பொருத்தவரை 458 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.
இந்த கார் அடாஸ் தொழிற்நுட்பம் ஹோண்டா சென்சிங் டெக்னாலஜியுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தொழில்நுட்பம் சிட்டி காரிலும் இருக்கிறது. இந்த ஹோண்டா எலிவேட் கார் தான் இந்தியாவில் மேனுவல் வேரியண்டில் அடாஸ் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வரவுள்ள காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களுக்கான காத்திருப்பு காலம் என்பது சமீபகாலமாக அதிகமாகவும் குறைவாகவும் மாறி மாறி வருகிறது. கார்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் எத்தனை கார்கள் வந்தாலும் அத்தனை கார்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். ஹோண்டா நிறுவனத்திற்கு என்று தனி பெயர் உள்ளது. அதனால் இந்த காரின் விற்பனை நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









