ஏற்கனவே எல்லாரும் மாச கணக்குல தவம் கெடக்கறாங்க! இதுல இது வேறயா! ஹோண்டா ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் களமிறக்கியுள்ள முதல் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஆகும்.

ஹோண்டா எலவேட் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த காரின் ஆரம்ப விலை (Price) 10.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Honda Elevate TVC

ஹோண்டா எலவேட் காரில் ஒரே ஒரு நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் என ஹோண்டா எலவேட் காரில் ஏராளமான அம்சங்கள் கவனம் ஈர்க்க கூடியவையாக உள்ளன.

Honda Elevate TVC Side View

SV, V, VX மற்றும் ZX என மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants), ஹோண்டா எலவேட் கார் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் ஹோண்டா எலவேட் காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) 6 மாதங்களாக உள்ளது. வேரியண்ட்கள், கலர் ஆப்ஷன்கள் மற்றும் டீலர்ஷிப் ஆகியவற்றை பொறுத்து, இந்த காத்திருப்பு காலம் மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் எலவேட் காரின் மெகா டெலிவரி நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கியுள்ளது. இதன்படி ஐதராபாத் நகரில் சமீபத்தில் மெகா டெலிவரி நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், 100 எலவேட் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டன.

இதேபோன்று வரும் காலங்களில் இன்னும் பல்வேறு மெகா டெலிவரி நிகழ்ச்சிகளை நடத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஹோண்டா எலவேட் காரின் புதிய டிவிசி வீடியோ (TVC Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில், ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை, செய்தியின் கடைசியில் நீங்கள் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கு போட்டியாகவே ஹோண்டா எலவேட் கார் களமிறக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய கார்களுக்கும், ஹோண்டா எலவேட் கார் விற்பனையில் சவால் அளிக்கும். ஹோண்டா எலவேட் காரின் வருகை, இந்த கார்களுக்கு எல்லாம் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 16, 2023, 19:58 [IST]
English summary
Honda elevate tvc video price engine all you need to know
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+