ஒரு லிட்டருக்கு 28 கிமீ ஓடும் ஹோண்டா கார் நாளை அறிமுகம்! இதுக்காகதான் ஒட்டுமொத்த நாடே காத்து கெடக்கு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த கார் நாளை (ஜூன் 6ம் தேதி) பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
நாளை ஹோண்டா எலவேட் காரை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் மட்டுமே வெளியாகும். ஆனால் விலை (Price) எவ்வளவு? என்பது வரும் பண்டிகை காலத்தின்போதுதான் அறிவிக்கப்படும். அப்போதுதான் ஹோண்டா எலவேட் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 360 டிகிரி கேமரா, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அடாஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், சிவிடி மற்றும் இ-சிவிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடன், ஹோண்டா எலவேட் போட்டியிடும்.
ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை அனேகமாக 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
ஹோண்டா எலவேட் காரை பற்றி குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 27-28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் என்பதுதான். இதுதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள மிக முக்கியமான அம்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட், போட்டி மாடல்களுக்கு மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்துடன் இந்திய சந்தையில் தற்போது தடுமாறி வரும் ஹோண்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் காராகவும் இது இருக்கலாம் என்பது எங்களின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








