இந்த நாளுக்காகதான் இவ்ளோ நாளா வெயிட்டிங்! எல்லாரும் காத்து கிடந்த ஹோண்டா கார் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரியுமா?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹோண்டா நிறுவனம் எலவேட் காரை இன்று (ஜூன் 6), அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.
டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் 'L' வடிவ எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை ஹோண்டா எலவேட் காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சதுர வடிவில் பெரிய க்ரில், ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா எலவேட் காரின் நீளம் 4,312 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் வீல்பேஸ் நீளம் 2,650 மிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 220 மிமீ எனவும், பூட் ஸ்பேஸ் 458 லிட்டர்கள் எனவும் ஹோண்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ஹோண்டா எலவேட் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.
இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். அத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியையும், ஹோண்டா எலவேட் கார் பெற்றுள்ளது.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், மல்டி ஆங்கிள் கேமரா மற்றும் பிரேக் அஸிஸ்ட் என ஏராளமான வசதிகள் ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் அடாஸ் (ADAS) தொழில்நுட்ப வசதியும் ஹோண்டா எலவேட் காரில் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா எலவேட் காரின் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை பொறுத்தவரையில், ஆட்டோ-ஹை பீம் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அஸிஸ்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். ஹோண்டா எலவேட் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் ஜூலை மாதத்தில் இருந்து தொடங்குகின்றன.
இதை தொடர்ந்து பண்டிகை காலத்தை முன்னிட்டு, வரும் அக்டோபர் மாதம், ஹோண்டா எலவேட் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது அறிவிக்கப்படவுள்ளது. எனினும் இதன் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா சிட்டி (Honda City) காரில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ஹோண்டா எலவேட் காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே என்றாலும் கூட, வரும் காலங்களில், ஹோண்டா எலவேட் காரில், பெட்ரோல்-ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹோண்டா எலவேட் காரின், எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் ஹோண்டா எலவேட் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு, இன்னும் சுமார் 3 வருடங்கள் ஆகலாம்.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுடன், ஹோண்டா எலவேட் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் காரின் பெட்ரோல்-ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் இன்றே அறிமுகம் செய்யப்படும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அது நடக்காதது உங்களை போலவே எங்களுக்கும் கூட மிகவும் ஏமாற்றமாகதான் இருக்கிறது. சரி, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








