ஹோண்டாவோட இந்த காரு இருந்தா வீட்டுக்கே கரண்ட் கிடைக்கும்! கரண்ட் ஃபுல் டே சட் டவுண் ஆகினாலும் கவல பட வேண்டாம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), ஓர் மினி வீட்டுக்கே தேவையான மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார் (Electrci car)-ஐ உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மின்சார தட்டுப்பாடு குறிப்பிட்ட சில மாநிலங்களில் இப்போதும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக குறிப்பிட்ட சில பகுதி வாசிகள் ஒரு நாள் முழுக்க இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அதன் எலெக்ட்ரிக் காரை ஓர் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் திறனுடன் உருவாக்கி இருக்கின்றது.

என் வேன் இ (N Van e) எனும் புதிய வேனிற்கே அது இந்த திறனை வழங்கி இருக்கின்றது. இது ஓர் வேன் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த வேனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 210 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.
இதற்காக சற்று பெரிய பேட்டரி பேக்கை இந்த காரில் பயன்படுத்தி இருக்கின்றது, ஹோண்டா. ஆனால், அது எத்தகைய திறன் கொண்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஹோண்டா நிறுவனம் அதன் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட என் வேன் மாடலை தழுவியே இந்த என் வேன் இ எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி இருக்கின்றது.
அதாவது, என் வேனிற்கு எலெக்ட்ரிக் எனும் அவதாரத்தை ஹோண்டா வழங்கி இருக்கின்றது. ஏற்கனவே இதன் எரிபொருள் வெர்ஷன் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதில் மின்சார வெர்ஷனையும் விற்பனைக்கு வழங்கும் விதமாக அதை உருவாக்கி அசத்தி இருக்கின்றது ஹோண்டா.
டாடாவும் இதே மாதிரியான யுக்தியைப் பயன்படுத்தியே, இந்திய மின்சார வாகன சந்தையை ஆண்டுக் கொண்டு இருக்கின்றது. இந்தியர்கள் அதிகம் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு இருக்கும் கார் மாடலான நெக்ஸான் எஸ்யூவி-யில் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அது கவர்ந்தது.
டாடா மற்றும் நாட்டின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். சமீபத்திலேயே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டாடா இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. நெக்ஸானை மட்டுமில்லைங்க டிகோர், டியாகோ ஆகிய ஐசிஇ எஞ்ஜின் கார்களையும் டாடா மோட்டார்ஸ், எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல், இன்னும் பல தன்னுடைய புகழ்பெற்ற ஐசிஇ எஞ்ஜின் கொண்ட கார்களை மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ஹோண்டாவும் அதன் உலக புகழ்பெற்ற என் வேன் மாடலை எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இதற்கு உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு குட்டி வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் திறனை என் வேன் கொண்டிருப்பதனாலேயே அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என யூகிக்க முடிகின்றது. உருவ தோற்றத்தைப் பொருத்த வரை நம்ம டாடா நெக்ஸானை போலவே, என் வேன் எரிபொருள் மற்றும் என் வேன் இ ஆகிய இரண்டிற்கும் இடையில் கணிசமான அளவு மட்டுமே வித்தியாசம் தென்படுகின்றது.
இந்த வேனுக்கான பெரிய பேட்டரி பேக் காரின் தரை பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. காரின் அனைத்து மூலைகளுக்கும் சமமான எடையை வழங்கும் பொருட்டு அது நடுநிலையான இடத்திலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை அதிக சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் வாகனமாக உருவாக்கி இருக்கின்றது.
இதன் இருக்கையை 180 டிகிரி வரை மடித்து வைத்துக் கொள்ள முடியும். அதிக ஸ்பேஸும் இதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், கார்கோ வாகனத்தைப் போலவும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாகனத்தின் பவர் அவுட்புட் திறன் 1,500 வாட் ஆகும். இதை வைத்து வீட்டில் உள்ள சின்ன சின்ன மின்சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முதலில் இந்த வாகனத்தை ஜப்பானிலேயே விற்பனைக்குக் கொண்டு வர ஹோண்டா பிளான் போட்டு இருக்கின்றது. ஆனால், இதன் இந்திய வருகை சந்தேகமாக உள்ளது. இதன் இந்திய வருகை குறிந்த எந்தவொரு தகவலையும் ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட வாகனமாகவும் தயார் செய்திருப்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் ஒட்டுமொத்த மின்சார கார் பிரியர்களையும் கவரும் வகையில் ஹோண்டா நிறுவனம் புதிய என் வேன் இ எலெக்ட்ரிக் வேனை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் ஜப்பான் வருகை மற்ற நாட்டினர் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தி இருக்கின்றது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








