மார்ச் மாசம் வர வெயிட் பண்ணுங்க எல்லாருக்கும் பிடிச்ச கார் வரப்போகுது!
இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கார்களில் ஹோண்டா சிட்டி காரும் ஒன்று ஒரு காலத்தில் மக்கள் அதிகம் இந்த காரை தான் விரும்பினர். ஆனால் தற்போது மக்கள் செடான் கார்களை அதிகம் விரும்புவதில்லை என்றாலும் இந்த காரின் விற்பனை ஒட்டு மொத்தமாகச் சரிந்துவிட வில்லை. தற்போதும் இந்த காரின் விற்பனை ஓரளவிற்கு டிசெண்டாகவே இருக்கிறது. இதனால் ஹோண்டா நிறுவனமும் இந்த காரை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.
என்னதான் பழைய காராக இருந்தாலும் அவ்வப்போது இந்த காரில் புதிய தொழிற்நுட்பங்களை ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிப்ட் காரை தற்போது புதிய அப்டேட்டகளுடன் வெளியிட ஹோண்டா நிறுவனம் தயாராகிவிட்டது. அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் இந்த காரை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் வெளியாகப்போவது ஹோண்டா சிட்டி காரின் மிட்-லைஃப் பேஸ்லிஃப்ட் காராகும். அதில் பழைய காரிலிருந்து சில கார்மெட்டிக்ஸ் மாற்றங்களும், சில புதிய அம்சங்கள் சேர்க்கப்படவுள்ளன. புதிய 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் அம்சங்களைக் காணலாம்.
அம்சங்கள்
இந்த புதிய ஹோண்டா சிட்டி காரில் வெளிப்புறத்தோற்றத்தில் மாற்றியமைக்கப்பட்ட புதிய பம்பர்கள் முன்புறமும் பின்புறமும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் புதிய அலாய் வீல்கள் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும். உட்புறத்தைப் பொருத்தவரை ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தான் புதிய காரில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களாகும்.
இன்ஜின்
2023 ஹோண்டா சிட்டி ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 2 எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது இது எல்லாம் சேர்ந்து 124 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த கார் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளியீட்டின் போது தான் காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகும். எப்படியும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் தற்போது விற்பனையாகி வரும் காரிலிருந்து சற்று அதிகமான விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி காரை பொருத்தவரை தற்போது பெட்ரோல் வேரியன்ட் ரூ11.87 லட்சம் முதல் ரூ15.62 லட்சம் என்ற விலையிலும், ஹைபிரிட் வேரியன்ட் ரூ19.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. அதை விட புதிய கார்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுடன் மார்கெட்டில் போட்டி போடும். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








