ஹோண்டா ஹோண்டாதான்யா.. ஃபுல் சார்ஜ்ல 500கிமீ போகும் காரை உருவாக்கி இருக்காங்க! இதோட பேரு வாயிலகூட நுழையாது போல!

கார் உற்பத்தியாளர்கள் பலர் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கி, அதில் கெத்துக் காட்டவும் தொடங்கிவிட்டனர். அந்தவகையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda)-வும் மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம் ஒரு சில நாடுகளில் மட்டுமே அதன் மின்சார கார்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஓர் முழு சார்ஜில் 500 கிமீ பயணிக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் காரை அதன் எலெக்ட்ரிக் கார்களின் வரிசையில் புதிதாக ஹோண்டா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார் ப்ரோலோக் இவி எனும் பெயரிலேயே உலக சந்தையைக் களம் காண இருக்கின்றது.

சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 33.23 லட்சம் விலையிலேயே ஹோண்டா ப்ரோலோக் இவி விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், இந்த காருக்கான ப்ரீ புக்கிங் பணிகளை வெகு விரைவில் தொடங்கவும் ஹோண்டா பிளான் போட்டு இருக்கின்றது.

இதன் அதிகாரப்பூர்வ வருகை அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரங்கேற உள்ளது. இந்த நிலையிலேயே ஹோண்டா ப்ரோலோக் இவி பற்றிய முக்கிய விபரங்கள் சில வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதாவது, எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப் மற்றும் பேட்டரி பேக் விபரம் உள்ளிட்டவை பற்றிய தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது.

இரட்டை மோட்டார் செட்-அப்பிலேயே இந்த காரை ஹோண்டா உருவாக்கி இருக்கின்றது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும் இணைந்து 288 எச்பி மற்றும் 451 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதுதவிர, முன் பக்க வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் என இரு விதமான ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்டரி பேக்கை பொருத்த வரை 85 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சில மின்சார சிக்கன யுக்தியை பயன்படுத்தினால் இந்த ரேஞ்ஜ் திறனை 500 கிமீட்டருக்கும் அதிகமாக்கிக் கொள்ள முடியும்.

Honda prologue ev

மேலும், 155 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக இதை சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் பத்தே நிமிடங்களில் 105 கிமீ தூரம் டிராவல் செய்யும் அளவிற்கு சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். இந்த திறன் எலெக்ட்ரிக் கார்களை சுண்டி இழுக்கக் கூடியதாக ப்ரோலோக் இவி விஷயத்தில் அமைந்திருக்கின்றது.

இதுதவிர, சிறப்பு வசதிகளாக இந்த காரில் 11.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 11 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் பலவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, மிக பெரிய ஸ்டோரேஜ் வசதி, ட்வின் கப் ஹோல்டர்கள், சென்டர் கன்சோல், ஒயர்லெஸ் சார்ஜர், ஹீட் மற்றும் கூலிங் செய்யும் திறன் கொண்ட முன் பக்க இருக்கைகள், எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, டூயல் ஜோன் க்ளைமட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பிளைன்ட் ஜோன்களில் அசிஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், ரியர் கிராஸ் டிராஃபிக் பிரேக் சிஸ்டம், பதாசாரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அது குறித்து எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றையும் ப்ரோலோக் இவியில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

இத்தனை அம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் காரையே ஹோண்டா உலக சந்தையில் விரைவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் இந்திய வருகை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு அதன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், மாருதி சுஸுகி, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் இப்போதும் நாட்டில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தயக்கம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த பிரிவில் இப்போதே கெத்துக் காட்டத் தொடங்கிவிட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 30, 2023, 14:10 [IST]
English summary
Honda prologue ev can travel 500 km in full charge
மேலும்... #ஹோண்டா #honda #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+