என்ன குமாரு பாத்து தயாரிக்க மாட்டீயா?.. ஐந்து லட்சம் கார்களில் பிரச்னை... ரீ-கால் விடுக்கும் ஹோண்டா நிறுவனம்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா (Honda), மிக மிக அதிக எண்ணிக்கையிலான கார்களுக்கு ரீ-கால் (Recall) விடுத்து உள்ளது. அதாவது, ஏற்கனவே விற்கப்பட்ட கார்களை சர்வீஸ் மையங்களுக்கு எடுத்து வருவதற்கான அவசர அழைப்பையே ஹோண்டா நிறுவனம் விடுத்திருக்கின்றது.
சுமார் அரை மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான கார்களுக்கே அவசர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருவியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை சீர் செய்யும் விதமாகவே இந்த ரீ-கால் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரித்த கார் மாடல்களின் சீட் பெல்ட் கொக்கிகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதை சரி செய்யும் பொருட்டே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. வாகன விபத்து நேரும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக வழங்கப்படும் மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாக சீட் பெல்ட்டுகள் இருக்கின்றன. பல உயிர்களை இந்த கருவி காப்பாற்றி இருக்கின்ற காரணத்தினால் இதனை உயிர் காக்கும் கருவி என வாகனத்துறையில் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய மிக முக்கியமான அம்சத்திலேயே கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இந்த கோளாறை சரி செய்யும் பொருட்டே தற்போது அவசர அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. 5 லட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா கார்களில் சீட் பெல்ட் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், இந்த அவசர அழைப்பு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய சந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற நாடுகளுக்கு இது பொருந்ததாது. சிலர் இந்த அழைப்பு இந்தியாவிற்கும் அடங்கும் என அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. ஆகையால், இந்தியர்கள் இதை எண்ணிக் கவலை அடைய தேவையில்லை. ஒருவேளை நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் வசித்துக் கொண்டிருக்கும் ஹோண்டா கார் பயன்பாட்டாளர்கள் என்றால் இந்த அழைப்பு உங்களுக்கு பொருந்தும்.
அதுவும், அந்த வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட வாகன மாடல்களுக்கு மட்டுமே அழைப்பு பொருந்தும். 2017 முதல் 2020 வரையில் தயாரிக்கப்பட்ட சிஆர்-வி, 2018 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட அக்கார்ட், 2018 முதல் 2020 வரையில் தயாரிக்கப்பட்ட ஒடைசி மற்றும் 2019 இல் தயாரிக்கப்பட்ட இன்சைட் ஆகிய மாடல்களுக்கே அவசர அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர அக்யூரா ஆர்டிஎக்ஸ் 2019 மற்றும் 2020களில் தயாரிக்கப்பட்டவற்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் உயிர் காக்கும் கருவியான சீட் பெல்டிலேயே பிரச்னை ஏற்பட்டு இருக்கின்றது. சீட் பெல்டில் வழங்கப்பட்டிருக்கும் கொக்கிகள், அதற்கான துளையில் பொருந்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
இதனை சரி செய்யவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. சீட் பெல்ட் கொக்கிகள் சரியாக பொருந்தவில்லை என்பது, மிகப் பெரிய அபாயம் அதன் பயணிகளுக்கு காத்திருக்கின்றது என்பதற்கான அறிகுறியாகும். எனவேதான் இந்த விஷயத்தில் மிக தீவிரமாக ஹோண்டா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.
இதனை சரி செய்யும் விதமாக ஹோண்டா கார் விற்பனையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கிவிட்டனர். செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக இந்த அழைப்பை ஹோண்டா விடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அழைப்பைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சீட் பெல்ட் கொக்கிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கொக்கிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








