கம்மி விலை காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா! சந்தையை புரட்டிப்போட போகுது! டாடா, மாருதி தாங்குமா!!

ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் எலவேட் எனும் புதுமுக கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். ஹோண்டா நிறுவனம் எஸ்யூவி காரின் உற்பத்தியை கைவிட்டு வெகு நாட்கள் ஆகின்றன. மேலும், நிறுவனத்தின்கீழ் எஸ்யூவி ரக கார் விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தென்பட்டது.

இந்த நிலையிலேயே எலவேட் கார் மாடல் வாயிலாக மீண்டும் எஸ்யூவி கார் பிரிவில் ஹோண்டா நிறுவனம் அதன் கால் தடத்தைப் பதித்து இருக்கின்றது. எஸ்யூவி கார் என்ற உடன் இதனை ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும்.

Honda elevate production begins

இந்த காரின் உற்பத்தி பணிகளையே ஹோண்டா நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் எலவேட் காரின் வருகை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகரா உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த காரை ஹோண்டா உற்பத்தி செய்கின்றது.

இந்த காரை இந்தியாவிற்கு என்றே பிரத்யேகமாக அந்நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரை 90 சதவீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வைத்தே ஹோண்டா தயாரிக்கின்றது. இதன் விளைவாகவே ஹோண்டா எலவேட் மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஹோண்டா நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவல்களின்படி ஹோண்டா எலவேட் ரூ. 10 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆனால், இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், காரும் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, அந்த மாதத்திலேயே எலவேட் காரின் டெலிவரி பணிகளும் தொடங்கும் என கூறப்படுகின்றது. இந்த காரின் முன்பதிவு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் எலவேட் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஹோண்டா கார் விற்பனையாளர்கள் அல்லது ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் என எதில் வேண்டுமானாலும் அக்காரை புக் செய்துக் கொள்ள முடியும். பயணிகளுக்கு அதிக இட வசதியை வழங்கும் பொருட்டு இந்த காரை ஹோண்டா தயாரித்து இருக்கின்றது.

இதற்காக மேன் மேக்சிமம், மெஷின் மினிமம் என்கிற யுக்தியை அது எலவேட்டில் பயன்படுத்தி இருக்கின்றது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் விசாலமான ஹெட்ரூம், லெக்ரூம் மற்றும் ஸ்பேஸ் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கும் என்பதே ஆகும். இதுதவிர லக்கேஜ்களை வைத்துக் கொள்ள ஏதுவாக 458 லிட்டர் பூட்-ஸ்பேஸும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், பயணிகளுக்கு மட்டுமல்ல பொருட்களை எடுத்துச் செல்லவும் மிகப் பெரிய அளவில் இட வசதி இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. எஞ்ஜினை பொருத்தவரை ஹோண்டா எலவேட்டில் 1.5 லிட்டர் ஐவிடெக் டிஓச்எசி பெட்ரோல் மோட்டார் தேர்வே வழங்கப்பட இருக்கின்றது. எஞ்ஜினால் 119 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும்.

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி இந்த இரண்டும் தேர்வுகளிலும் எலவேட் கிடைக்கும். இத்தகைய சூப்பரான காரின் உற்பத்தி பணிகளையே ஹோண்டா நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது. வெகு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த பணியை ஹோண்டா தீவிரப்படுத்தி இருக்கின்றது.

செல்போன்களை ஒயர்லெஸ்ஸாக இணைக்கும் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஹோண்டா கன்னெக்ட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இந்த அம்சம் வாயிலாக ஸ்மார்ட் வாட்ச்சையும் காருடன் இணைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஒற்றை டோன் மற்றும் டூயல் டோன் நிற தேர்வுகளில் எலவேட் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இப்போதைய நிலவரப்படி வெறும் செடான் ரக கார்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 31, 2023, 18:09 [IST]
English summary
Honda starts elevate suv production in india
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+