இப்படிப்பட்ட காரை ஒரே நாள்ல இத்தனை பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா? சென்னையில் மாஸ் காட்டிய ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் ஒரே நாளில் 200 எலவேட் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. சென்னையில் தான் இந்த மெகா டெலிவரி நிகழ்ச்சி நடந்துள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்யூவி செகண்ட் காலடித்தடத்தை பதித்துள்ள ஹோண்டா நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் எலவேட் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் தனது எஸ்யூவி கார்களை எல்லாம் நிறுத்தி சில மாதங்களாக வெறும் செடான் கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக எலவேட் மிட் சைஸ் எஸ்யூவி காரை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது.

honda elevate mega delivery

இந்த கார் அறிமுகமாகும் போது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது. மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் செக்மெண்டிற்க்குள் ஹோண்டா நிறுவனம் மீண்டும் தனது கால் அடித்தளத்தை எடுத்து வைத்திருப்பது பலரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த காருக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

ஹோண்டா எலவேட் காரை பொறுத்தவரை சிங்கிள் இன்ஜின் மற்றும் இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டிஓஎச்சி ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 119 பிஎச்பி பவரையும் 145.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டதாக விற்பனைக்கு வருகிறது.

honda elevate mega delivery

இந்த எலிவேட் மிட் சைஸ் எஸ்யூவி கார் 15.31 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதில் சிவிடி வெர்ஷன் கார் 16.92 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் மொத்தம் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது அதன்படி எஸ்வி, வி,விஎக்ஸ் மற்றும் இஸட் எக்ஸ் ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

இந்தக் காரின் டிசைனை பொருத்தவரை முன்பக்கம் பெரிய கருப்பு நிற ரேடியேட்டர் கிரில் உடனும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்,எல்இடி டெயில் லைட், கருப்பு நிற பாக்லாம்ப், பெரிய வீல் ஆர்ச்களுடன் 17 இன்ச் அலாய் வீல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

பக்கவாட்டை பொருத்தவரை கேரக்டர் லைன்களுடன், கருப்பு நிற கிளாடி் ஆகியவற்றுடன் இந்த கார் சிறப்பான லுக்கை கொடுக்கிறது. இந்த காரில் 220 மிமீ கிரவுண்டு கிளியரன்ஸ் இருக்கிறது இது இந்த செக்மெண்டில் உள்ள கார்.களிலேயே அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருக்கிறது.

இந்த காரில் உட்புறத்தை பொருத்தவரை 10.25 டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இது போக ஹச்டி கலர் டி எப் டி இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் இந்த காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷனும் இருக்கிறது.

இந்த காரின் கலர் ஆப்ஷனை பொறுத்தவரை சிங்கிள் டோனில் பிளாட்டினம் ஒயிட் பேர்ல், லூனார் சில்வர் மெட்டாலிக், ஒப்ஸிடியன் ப்ளூ, ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மெட்டராய்ட் கிரே மெட்டாலிக், ஃபோனிக்ஸ் ஆரஞ்சு கலர் ஆகிய ஆப்ஷன்களில் கலர்கள் உள்ளன.

மேலும் மூன்று டூயல் டோன் கலர்கள் டாப் வேரியன்ட்களில் மட்டும் உள்ளது. அதன்படி போனிக்ஸ் ஆரஞ்சு ஸ்பெல் ரூஃபில் கிரிஸ்டல் பிளாக் பேர்ல், மற்றும் பிளாட்டினம் வைட் பேர்ல் ரூப்பில் கிறிஸ்டல் பிளாக் பேர்ல், மற்றும் ரேடியன் ரெட் மெட்டாலிக் ரூப்பில் கிரிஸ்டல் பிளாக் பேர்ல் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரின் டெலிவரிகள் துவங்கிய நிலையில் சென்னையில் ஒரே நாளில் 200 பேருக்கு டெலிவரி செய்ய மெகா டெலிவரி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஒரே நாளில் 200 வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது இந்த காரின் விற்பனைக்கான மிக முக்கியமான வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த கார் மிகப்பெரிய வளர்ச்சியை எப்படி பிடிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தனது டெலிவரி இப்படி மெகா நிகழ்வாக நிகழ்த்துவதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பிரபலம் கிடைக்கும் என எதிர்பார்த்த இந்த நிகழ்வை திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஒரே நாளில் 200 கார்கள் டெலிவரி என்ற செய்தி தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது

More from DriveSpark

Article Published On: Monday, September 25, 2023, 20:22 [IST]
English summary
Hondas grand mega delivery over 200 units delivered in a single day
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+