எலெக்ட்ரிக் வண்டில அடிக்கடி பேட்டரி மாத்தனுமா? ரொம்ப நாளா இந்த டவுட் மக்களுக்கு இருக்குது!

இன்று உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகி வருகிறது. பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற யோசித்து வருகின்றனர். பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது லாபமானதா? நஷ்டமானதா? இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் மாசுக்கட்டுப்பாட்டுக்காக பெட்ரோல் டீசல் அல்லாத மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களை பயன்படுத்த அரசு மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு பெரும் உதவியாக இருப்பது எலெக்ட்ரிக் வாகனங்கள் தான். உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் பிரபலம் ஆகி வருகிறது. இருந்தாலும் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க சற்று யோசனை இருக்கிறது.

EV Battery life

பேட்டரிகள்: எலெக்ட்ரிக் வாங்கனங்களில் முக்கியமான பாகம் அதன் பேட்டரி தான். பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் ரீசார்ஜபில் லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது. இது லெட் ஆசிட் பேட்டரிகளை விட அதிகமான மின் சக்தி திறனை தாங்கும் என்பதால் இந்த பேட்டரிகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

செலவு: எலெக்ட்ரிக் வாகனத்தில் அதிகமான செலவு அதன் பேட்டரி தான். எலெக்ட்ரிக் வானத்தின் பேட்டரியின் விலை கடந்த 30 ஆண்டுகளில் 97 சதவீதம் குறைந்துள்ளது. இருந்தாலும் தற்போதும் அது அதிகமான விலையில் தான் விற்பனையாகி வருகிறது. ஆனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் விரைவில் இந்த பேட்டரியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EV Battery life

பேட்டரி ஆயுள்: எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் போது பலர் யோசிக்கும் விஷயம் பேட்டரியின் ஆயுள் தான். பொதுவாக ஒரு பேட்டரியின் ஆயுள் மூன்று விதமான காரணங்களால் குறைகிறது. ஒரு பேட்டரி இருக்கும் இடத்தில் உள்ள வெப்ப அளவு, அது எவ்வளவு முறை பயன்படுத்தப்படுகிறது, பேட்டரியின் வயது, இந்த மூன்றையும் பொருத்துதான் அதன் ஆயுள் அமைகிறது.

ஒரு பேட்டரி அதிக வெப்பம் உள்ள இடத்தில் இருந்தால் அதன் ஆயுள் வேகமாக குறையும். அதிக முறை சார்ஜ் ஏற்றுவதன் மூலம் கூட அதன் ஆயுள் குறையும். அதாவது எவ்வளவு பயன்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு குறையும். கடைசியாக பேட்டரியின் வயது, அதாவது பேட்டரி தயாரிக்கப்பட்டது முதல் எவ்வளவு காலம் ஆகிறதோ நீங்கள் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தாலும் அதன் ஆயுள் குறைந்து கொண்டே தான் இருக்கும்.

EV Battery life

பேட்டரி மாற்ற வேண்டிய தேவை வருமா?: எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் போது பலர் இந்த வாகனத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பேட்டரியை மாற்ற வேண்டிய தேவை வரும் என்று பயப்படுகின்றனர். ஆனால் உங்கள் பேட்டரியின் செயல் திறன் குறைகிறது என நீங்கள் கருதினால் உங்கள் பேட்டரியை செக் செய்து பேட்டரியில் உள்ள செல்களை மட்டும் மாற்றம் தொழில்நுட்பம் எல்லாம் வந்துவிட்டது. இதனால் ஒட்டுமொத்த பேட்டரி மாற்ற வேண்டிய தேவை இருக்காது.

பேட்டரி உழைப்பு: உலகம் முழுவதும் இவி கார்களில் பேட்டரியின் உழைப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் 2.3% தேய்மானம் அடைந்து கொண்டே வருகிறது. அப்படி கணக்கிட்டால் பேட்டரியின் தேய்மானம் 50% வரை வர 21 ஆண்டுகள் வரை ஆகும். இது பெட்ரோல் டீசல் கார்களின் உழைப்பை விட மிகவும் அதிகம் தான் இந்த தேய்மானத்தின் அளவு என்பது முறையான பராமரிப்பு செய்தால் மட்டுமே கிடைக்கக் கூடியது பராமரிக்கவில்லை அல்லது பேட்டரிக்கான ஆயுளை குறைக்கும் மற்ற அம்சங்களால் இதன் உழைப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மவுசு அதிகமாகி வரும் நிலையில் இந்தியாவிலும் அதற்கான விற்பனை அதிகமாகி வருகிறது. நீங்கள் ஒரு எலெக்ட்ரிக் வானத்தை வாங்க வேண்டியது தற்போது உங்களுக்கான ஒரு தேவையாக இருந்தால் அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சரியாக பராமரித்தால் உங்களுக்கு செலவு எதுவும் பெரிய அளவில் ஏற்படாது.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 15:20 [IST]
English summary
How long does the electric vehicle battery last answer for your confusion
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X