எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண பத்து ரூபா போதுமா! இத்தன நாளா இந்த எலி விரட்டி பற்றி தெரியாம போச்சே!
எலிகளை ஒழிக்க ஒரு சில நாடுகள் பல நூறு கோடி ரூபாய்களை வாரி இறைத்துக் கொட்டிருக்கின்றன. ஏன் நம்மில் ஒரு சிலரும்கூட பல ஆயிரக் கணக்கான ரூபாய்களை எலிகளைத் தவிர்க்க செலவழித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களில் இருந்து எலிகளை அப்புறப்படுத்துவதற்காக ஆயிரக் கணக்கான ரூபாய்களை வாரி இறைத்த வண்ணம் இருக்கின்றனர்.
இருப்பினும் இந்த எலிகள் காருக்குள் புகுந்து நாசம் செய்துவிடுகின்றன. ஒரு முறை ஒரு எலி புகுந்துவிட்டால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்பது விவரிக்க முடியாததாக இருக்கும். அந்த அளவிற்கு மிக மோசமான பாதிப்புகளை இந்த எலிகள் வாகனங்களில் ஏற்படுத்திவிடும். குறிப்பாக, ஓர் எலி எஞ்ஜினுக்குள் நுழையும் எனில் அதில் உள்ள முக்கிய ஒயர் லைன்கள் தொடங்கி பைப் லைன் வரை என அனைத்தையும் அது கடித்து கொதறிவிடும்.

இதனாால் ஏற்படும் செலவும் மிக மிக அதிகமாகவே இருக்கும். இது மட்டுமில்லைங்க இந்த எலிகள் காரில் உள்ள துணி, பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் மின் சாதனங்கள் சிலவற்றையும் சேதப்படுத்திவிடுகின்றன. இவ்வாறு நடக்கும் எனில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் தண்ட செலவு நமக்கு ஏற்படும்.
இத்தகைய நிலை ஏற்படும் எனில் பல ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு செய்தது எதற்கு என்கிற ஆதங்கமே நமக்கு எழும். அதேவேளையில், ஒரு சில வாகன உரிமையாளர்கள் எலிகளை காருக்குள் நுழையாமல் தடுக்க ஆயிரக் கணக்கான ரூபாய் தேவையே இல்லை என்கின்றனர், ஒரு சில ரூபாய்கள் இருந்தாலே போதும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எலியை ஓட ஓட விரட்டியடிக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். அப்படி என்ன பொருள் அது? என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்புகின்றதா, இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். ஆட்டோ ஞானி எனும் யுட்யூப் சேனலே இந்த டிப்ஸ் குறித்த வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கின்றது.
அது வெளியிட்டு இருக்கும் வீடியோவின்படி, வீடுகளில் துணிகள் அடுக்கி வைக்கும் அலமாரியில் நாம் பயன்படுத்தும் ரச கற்பூரம் (naphthalene ball) மற்றும் பாக்கு (tobacco) உள்ளிட்டவற்றை பயன்படுத்தினாலே எலியை முழுமையாக விரட்டியடிக்க முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த இரண்டு பொருளையும் சில ரூபாய்களே போதுமானது.

முழுசா 20 ரூபாய்கூட இந்த பொருளை வாங்க தேவைப்படாது. இத்தகைய மலிவு விலை பொருட்களைக் கொண்டே கார்கள் மற்றும் வாகனங்களில் எலியை இதுவரை தாங்கள் தவிர்த்ததாக யுட்யூப் சேனல் தெரிவித்து இருக்கின்றது. ரச கற்பூரம் மற்றும் பாக்கு ஆகியவற்றை ஒரே துணியில் சேர்த்து கட்டிய அவர்கள் அதையே காரில் எலி நுழைவதற்கு சாத்தியமாக இருக்கும் இடங்களில் வைத்திருக்கின்றனர்.
அதேவேளையில், நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் இருக்கின்றது. அது என்ன என்றால் ரச கற்பூரம் மற்றும் பாக்கு ஆகிய இரண்டும் எளிதில் தீப் பிடிக்கக் கூடியவை. ஆகையால், அவற்றை நாம் வைக்கும் அதிகம் சூடாகக் கூடியதாக இருக்கக் கூடாது.
இது எலியால் ஏற்படும் ஆபத்தைவிட மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. வாகனத்தின் பூட், குளோவ்பாக்ஸ் மற்றும் எஞ்ஜினின் பக்கவாட்டு பகுதியில் (பேட்டரி மற்றும் வைப்பருக்கு நீரை வழங்கும் தொட்டிக்கு அருகில்) இந்த பொருட்களை வைக்கலாம். இந்த இடங்களையே எலிகள் தாங்கள் வாழ சிறந்த இடமாகக் கருதி உள் நுழைகின்றன.
இந்த பொருட்களை வைப்பதனால் எலி மட்டுமல்ல பல்லி, கரப்பான் பூச்சி போன்றவற்றின் தொல்லைகளையும் முற்றிலுமாக ஒழிக்க முடியும். மேலும், இவ்வாறு செய்வதனால் நமக்கு பெரிய அளவில் செலவும் ஏற்படாது. பலர் எலியைத் தவிர்க்க பல நூறு அல்லது ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கும் வழிமுறைகளையே பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு சில ரூபாய்களை மட்டுமே செலவாகக் கூடிய டிப்ஸை ஆட்டோ ஞானி யுட்யூப் சேனல் வழங்கி இருக்கின்றது.இந்த டிப்ஸ் பலருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, கேப் டிரைவர்கள் மற்றும் பட்ஜெட்டில் காரை பராமரிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இந்த தகவல் பெரும் உதவியாக இருக்கப் போகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிலருடைய வீட்டில் ரச கற்பூரம் மற்றும் பாக்கு என்பது சாதாரணமாகவே இருக்கும். இவர்களுக்கு தேவையானது சிறிய துணி துண்டு மட்டுமே. அதுவும் இருந்தால், எலியை கட்டாயம் காருக்குள் நுழைவே முடியாத வகையில் செய்துவிட முடியும். இது உங்களுக்கு செட் ஆகாது என நினைத்தால் சந்தையில் மலிவு விலையில் எலியை விரட்டும் கருவிகள் மற்றும் மருந்துகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உங்களால் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications









