எப்படி அசால்டா கார் பைக்கை எல்லாம் திருடிட்டு போறாங்க தெரியுமா? நீங்க பண்ணுற ஒரு சில தப்புகள் தான் காரணம்!

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கார் திருட்டு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு லட்சம் காராவது திருடப்பட்டு வருகிறதாம். இப்படியாகத் திருட்டு சம்பவங்கள் நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகமாகவும், ஒரு சில பகுதிகளில் குறைவாகவும் இருக்கின்றது. இன்று என்னதான் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்டாலும் திருட்டு நடந்து கொண்டே தான் இருக்கிறது.

கார் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பிற்காக என்னதான் புதிய புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தினாலும் நாமும் கார் திருட்டை நாமும் சில விஷயங்களைச் சரியான பின்பற்றினால் கார் திருடப்படுவதைத் தடுக்க முடியும். நாம் செய்யும் சின்ன சின்ன கவனக்குறைவு மற்றும் அசால்டு தனத்தாலும்தான் கார் திருட்டு சம்பவம் நடக்கிறது.

பாதுகாப்பான இடத்தில் பார்க்கிங் : கார் வைத்திருக்கும் சிலர் அதைப் பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்வதில்லை. மாறாக ரோட்டில் பார்க் செய்கின்றனர். பெரும்பாலும் இப்படிப் பாதுகாப்பில்லாத இடத்தில் நிறுத்தப்படும் கார்கள் தான் திருடர்களுக்கு முதல் குறியே. அதனால் காரை முறையாக பார்க்கிங்கில் நிறுத்துங்கள். அதுவும் அங்கு சிசிடிவி கேமரா இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சாவி பத்திரம் : இன்று திருட்டுப் போகும் பெரும்பாலான கார்கள் ஏதோ பூட்டை உடைத்துத் திருடப்படுவதில்லை. மாறாகச் சாவியைப் போட்டே திருடி விடுகின்றனர். அப்படி என்றால் உங்கள் சாவியைத் திருடியோ அல்லது உங்கள் சாவி போல டூப்ளிகேட் சாவியைச் செய்தோ திருடுகின்றனர். இதனால் உங்கள் சாவியை வேறு நபரிடம் கொடுக்காதீர்கள். நீங்களும் கவனக்குறைவாக வைத்து விடாதீர்கள். எப்பொழுதும் உங்களிடமே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கீலெஸ் கார்களுக்கான பாதுகாப்பு : இன்று கீலெஸ் கார்களின் வருகை அதிகமாகிவிட்டது. இந்த காரை ஹேக் செய்து எளிதாகத் திருடி விடுகின்றனர். ஆனால் இதற்கு உங்கள் கையில் இருக்கும் வயர் லெஸ் கீயின் கோட் தேவைப்படும் இதை மற்றவர்கள் ஹேக் செய்யாமல் இருக்க ஆன்லைனில் ஃபேரடே என்ற பவுச் விற்பனையாகி வருகிறது. அந்த பவுச்சை வாங்கலாம்.

ஸ்டியரிங் வீல் லாக் : இன்று கார் திருட்டு சம்பவம் பெரும்பாலும் திருடர்கள் காரை ஸ்டார் செய்து ஓட்டிச் செல்கின்றனர். அவர்கள் பல்வேறு வழிகளில் லாக் செய்த காரை திறக்கின்றனர். அதை ஓட்டியும் செல்கின்றனர். அதனால் கார் லாக் போக ஸ்டியரிங் லாக் ஒன்றும் இருக்கிறது. அதை வாங்கி பொருத்தினால் உங்கள் காரை ஹேக் செய்தாலும் ஸ்டிரியிங் லாக்கை திறக்காமல் காரை திருட முடியாது. இதனால் திருட்டு தடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

விலையுயர்ந்த பொருட்களை விட்டுச் செல்லாதீர்கள் : கார்களை திருடும் சம்பவத்தை விட நிறுத்தப்பட்ட கார்களில் உள்ளே இருந்த விலையுயர்ந்த பொருட்களைத் திருடும் சம்பவம் மிக அதிகம். இதனால் நீங்கள் காருக்குள் எப்பொழுதும், செல்போன், லேப்டாப், தங்கப் பொருட்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை காருக்குள் விட்டுச் செல்லாதீர்கள். நீங்கள் கையிலேயே எடுத்து செல்லுங்கள். காருக்குள் இந்த பொருட்களைப் பார்க்கும் போது தான் திருடர்களுக்குத் திருடும் மனப்பான்மை வருகிறது.

ஜிபிஎஸ் மற்றும் இம்மொபிலைஸர் : இன்று கார்களில் பொருத்தக்கூடிய ஜிபிஎஸ் மற்றும் இம்மொபிலைஸர் கருவிகள் உள்ளன. ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருந்தால் கார் திருடப்பட்டாலும் இருக்கும் பகுதியை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இது போக ஜியோ பென்ஸிங் என்ற ஆப்ஷன் இருந்தால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே உங்கள் கா் சென்றால் தானா ஆஃப் ஆகிவிடும் வசதியும் இருக்கும்.

இம்மொபிலைஸர் என்ற கருவி இருக்கிறது. இந்த கருவி பொருத்தப்பட்டிருந்தால் காரின் உரிமையாளர் இன்ஜின் லாக்கை எடுக்காமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாது. அதனால் கார் திருட்டைத் தடுக்க முடியும். இந்த கருவி கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரவில்லை என்றாலும் இதை ஆஃப்டர் மார்கெட்டில் வாங்கி பொருத்திக்கொள்ள முடியும்.

போலீஸ் புகார் : இதை எல்லாவற்றையும் மீறி உங்கள் வாகனத்தை ஒருவர் திருடிக்கொண்டு போய்விட்டார் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது போலீஸ் புகார் தான். நீங்கள் போனது போகட்டும் என விட்டுவிட்டால் உங்களிடமிருந்து திருடப்பட்ட கார் வேறு ஏதாவது சட்ட விரோதமான செயலுக்குப் பயன்படுத்தப்பட்டால் போலீசார் உங்களைத் தான் தேடி வருவார்கள்.

அதன்பின் நீங்கள் என்னதான் கார் தொலைந்துவிட்டதைச் சொன்னாலும் அதற்கான ஆதாரம் இல்லாததால் போலீசார் உங்களைச் சந்தேகப்படக்கூடும். இதனால் கார் திருடப்பட்ட விபரம் தெரிந்தவுடன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்து உங்கள் கார் நம்பர், மற்றும் மாடலை சொல்லித் திருடப்பட்ட இடம் குறித்தும் தகவல் தெரிவியுங்கள் அதன் பின் போலீஸ் ஸ்டேஷனில் முறையான புகாரைப் பதிவு செய்யுங்கள்.

பெரும்பாலும் இந்த விஷயங்களைப் பின்பற்றினாலே உங்கள் கார் திருடப்படுவது தடுக்கப்பட்டுவிடும். உங்கள் பொருட்களை நீங்கள் தான் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 22, 2023, 16:00 [IST]
English summary
How to prevent your vehicle from being stolen by thieves
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+