Hybrid Car பயன்படுத்துவதால் இவ்வளவு லாபமா? இப்பவே ஒன்ன யோசிக்காம வாங்கி போடுங்க!

ஒரு காலத்தில் பெட்ரோல் கார் பெஸ்டா? டீசல் கார் பெஸ்டா என்ற ஒப்பீடு செய்யப்பட்டு வந்தது. இன்று டீசல் இன்ஜின் கொண்ட கார்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் இன்று ஒப்பிட ஏகப்பட்ட ஆப்ஷன்கள் வந்துவிட்டன எலெக்ட்ரிக் வானகங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றன. இதற்கிடையில் ஹைபிரிட் வாகனங்களின் மீது மக்களின் கவனம் செல்கிறது.

பெட்ரோல் வாகனமும் எலெக்ட்ரிக் வாகனமும் வேறு வேறு தொழிற்நுட்பத்தில் செயல்படக்கூடியது. ஆனால் ஹைபிரிட் வாகனங்கள் புதுமையாக பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகியவற்றைச் சேர்த்துச் செயல்படும் ஒரு தொழிற்நுட்பமாகும். எந்த வாகனமாக இருந்தாலும் இறுதியில் நம் கையிலிருந்து எவ்வளவு பணம் செலவாகிறது என்பது தான் முக்கியம்.

Hybrid Car vs Petrol car

அந்த வகையில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களைப் பயன்படுத்துவதில் எது லாபகரமானது? எது நமக்கு நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்றது? எதில் பராமரிப்பு செலவு குறைவு? எது அதிக சூடாகாத கார், ரிப்பேர் செலவு எதில் குறைவு, எந்த கார் குறைவான செலவை வைக்கும் என்பதைத் தான் ஒப்பிட்டுக் காணப்போகிறோம்.

தற்போது மார்கெட்டில் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்டிராங்க் ஹைபிரிட் என இரண்டு விதமான ஹைபிரிட் ஆப்ஷன் கொண்ட கார்கள் விற்பனையில் இருக்கின்றன. இதில் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பம் தான் முழுமையான ஹைபிரிட் தொழிற்நுட்பம் என்பதால் அதையே கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

Hybrid Car vs Petrol car

பராமரிப்பு செலவைப் பார்த்தால் பெட்ரோல் கார்களை விட ஹைபிரிட் கார்களுக்கு பராமரிப்பு குறைவு தான். அது மட்டுமல்ல இதில் உள்ள ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம் காரணமாகப் பல சக்தி சேமிக்கப்படுகிறது. இதனால் நமக்கு எரிபொருள் செலவு மிச்சமாகிறது.

உதிரிப் பாகங்களை எடுத்தக்கொண்டோல் இதில் கிளட்ச் கேஸ், ஆல்டர்னேட்டர், ஸ்டார்ட்டர் மோட்டார், டைமிங் பெல்ட் உள்ளிட்டவை கிடையாது. அதனால் அதைப் பராமரிக்க வேண்டிய செலவு மிச்சம். அதே நேரம் ரீஜெனரேட்டிவ் பிரேக் காரணமாக கார் விரைவாக ஸ்லோ ஆகிவிடுவதால் பிரேக் பிடிக்க வேண்டியது குறைகிறது. பிரேக் தேய்மானம் குறைவாக நடப்பதால் இதன் செலவும் குறைகிறது.

Hybrid Car vs Petrol car

சரி எரிபொருள் ஒப்பீட்டிற்கு வருவோம். நாம் மாதம் 1000 கி.மீ வரை காரை பயன்படுத்தும் நபர் என வைத்துக்கொள்வோம். நாம் கார் லிட்டருக்கு 15 கி.மீ மைலேஜ் கொடுத்தால் 66 லிட்டர் பெட்ரோலை மாதத்திற்கு பயன்படுத்துவோம். இதனால் மாத பெட்ரோல் செலவு (லிட்டருக்கு ரூ100 எனக் கணக்கிட்டால்) ரூ6600ஆகிறது. இதுவே ஆண்டிற்கு 79200 ஆகிறது. 8 ஆண்டுகள் கணக்கிட்டால் ரூ6.33 லட்சம் செலவாகிறது.

இதுவே ஹைபிரிட் காராக இருந்தால் அதே கார் சராசரியாக 22 கி.மீ மைலேஜ் கொடுக்கும் இதனால் மாதம் 45 லிட்டர் பெட்ரோல் போட்டால் போதும். செலவு மாதம் ரூ 4500, ஆண்டிற்கு ரூ 54,000, 8 ஆண்டுகளுக்கு ரூ4,32,000 ஆயிரம் செலவாகும் அப்படிப் பார்த்தால் 8 ஆண்டில் ரூ2 லட்சம் வரை செலவை மிச்சப்படுத்த முடியும்.

இந்தியாவில் என்ட்ரி லெவல் ஹைபிரிட் கார்கள் ரூ12-15 லட்சம் என்ற விலையிலும் சொகுசு ஹைபிரிட் கார்கள் ரூ30 லட்சம் வரையிலும் விற்பனையாகி வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் உங்களுக்கு உகந்ததாக இல்லை என நீங்கள் கருதினால் நீங்கள் ஹைபிரிட் காரை துணிந்து தேர்வு செய்யலாம். எல்லா வகையிலும் பெட்ரோல் காரைக் காட்டிலும் லாபகரமானதாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 12, 2023, 13:03 [IST]
English summary
Hybrid car is more profitable than petrol know how to calculate
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X