அசால்டா 28 கி.மீ மைலேஜ் தரும்! இதுல எந்த காரை வேணாலும் வாங்குங்க செம ஒர்த்!
இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலைக்கு இடையில் மக்கள் மத்தியில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் பலர் கார் வாங்கும் போது அதன் மைலேஜ் மிக முக்கியத்துவமான விஷயமாக பார்க்கின்றனர். அப்படியாக இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்கள் விற்பனையாகி வருகின்றன. அதைப்பற்றி தான் காண போகிறோம்.
தற்போது நடைமுறையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறையின் காரணமாக டீசல் கார்களை அதிகம் உற்பத்தி செய்ய முடியவில்லை. டீசல் இன்ஜின் அதிக மைலேஜ் தரும் வகையில் அதை வடிவமைக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலும் நிறுவனங்கள் டீசல் இன்ஜினை கைவிட்டு விட்டு பெட்ரோல் இன்ஜினை தயாரிக்கின்றனர். ஆனால் மைலேஜிற்காக தற்போது ஸ்டராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் பெரிய உதவி செய்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்: இந்துக்கள்தான் இந்தியாவிலேயே குறைந்த விலை ஹைபிரிட் எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த கார் ரூபாய் 16.46 லட்சம் முதல் 19.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 27.97 கிலோமீட்டர் மைலேஜை வாரி வழங்குகிறது. இந்த காரை தற்போது மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக இவ்வளவு மைலேஜ் தரும் கார் இந்திய மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா: டொயோட்டா நிறுவனத்தின் அக்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் தான் மாருதி நிறுவனத்தின் பெயரில் கிராண்ட் விட்டாரா என்ற காராக விற்பனையாகி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் கீழ் இந்த கார் பகிரப்படுகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 18.29 லட்சம் முதல் ரூபாய் 19.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரம் 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வாரி வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இரண்டு காரும் ஒரே இன்ஜின் மற்றும் ஒரே தொழில்நுட்பத்தை தான் கொண்டுள்ளன.

ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி: ஹோண்டா நிறுவனமும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கி அதில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஹோண்டா சிட்டி காரில் ஹைபிரிட் வெர்ஷனாக இ:ஹெச்இவி என்ற கார் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூபாய் 18.99 லட்சம் முதல் ரூபாய் 20.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 27.13 கிலோமீட்டர் மைலேஜ் வாரி வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது.
மாருதி சுஸூகி இன்விக்டோ: டொயோட்டா மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் படி டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை மாருதி நிறுவனம் ரீபேட்ஜ் செய்து இன்விக்டோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூபாய் 24.79 லட்சம் என்ற விலையில் துவங்கி ரூபாய் 28.42 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் மைலேஜ் தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்: டொயோட்டோ நிறுவனம் இன்னோவா காரை அப்டேட் செய்து இன்னோவா ஹைகிராஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இதன் ஹைபிரிட் வேரியன்ட் ரூபாய் 25.30 லட்சம் முதல் 30.26 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தான் மாருதி நிறுவனத்தில் இன்விக்டோ என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது மாசு கட்டுகிறப்பாடு காரணமாக இந்தியா முழுவதும் கார்கள் உற்பத்தி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் பல நிறுவனங்கள் மாற்று எரி சக்தி கொண்ட கார்களை தயாரிக்க துவங்கி விட்டன. அந்த வகையில் தான் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

ஸ்டிராங் ஹைபிரிட் என்றால் எலெக்ட்ரிக் மோட்டாரும், பெட்ரோல் இன்ஜினும் ஒரே காரில் இருக்கும் வகையிலான கார் தான் இதில் குறிப்பிட்ட வேகம் வரை பேட்டரி பவரிலும் குறிப்பிட்ட அளவிற்கு மேலான வேகத்தை பெட்ரோல் பவரிலும் இயங்கும்படி இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் தான் இந்த காருக்கு ஹைபிரிட் என பெயர் உள்ளது. மைல்டு ஹைபிரிட் என்றால் பேட்டரி பவர் குறைவாகவும் பெட்ரோல் பவர் அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எதிர்காலத்தில் மாற்று எரி சக்திக்கான கார்கள் தான் அதிகம் விற்பனையாகும் குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகமாய் வருகிறது. இருந்தாலும் தற்போது எலெக்ட்ரிக் கார் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற காராக இல்லை என மக்கள் மத்தியில் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் காரர்கள் நிச்சயம் பெரும் புரட்சி ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









