1.29 கோடி ரூபா காரை வாங்கிய சிறுவன்.. இவ்ளோ பெரிய தொகையா! எப்படி சேத்து வச்சிருப்பாரு!
இந்தியாவின் இளம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) சொகுசு கார் உரிமையாளர் என படத்தில் உள்ள நபரை கூறலாம். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி. பதின் பருவத்தையே முழுமையாக தாண்டாத சிறுவனாக இவர் இருக்கின்றார். இந்த சிறுவனே தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி சொகுசு காரை வாங்கி இருக்கின்றார்.
இந்த காரின் விலை 1.29 கோடி ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இத்தகைய அதிக விலைக் கொண்ட காரையே சிறுவன் வாங்கி இருக்கின்றார். அப்பா-அம்மா அல்லது தாத்தா-பாட்டி யாராச்சும் இந்த காரை வாங்கி இருப்பார்கள் என நினைத்தால் அதற்கான எந்த தடயமும் தென்படவில்லை.

சிறுவன் மட்டுமே அவருடைய பாதுகாப்பு நபர்களுடன் வந்து காரை டெலிவரி எடுத்திருக்கின்றார். அதேபோல், காரை வாங்குவதற்கான ஆவணங்கள் சிலவற்றில் அவரே கையெழுத்திட்டிருக்கின்றார். இதுதவிர, சிறுவனின் பெயரை போட்டே மெர்சிடிஸ் கார் விற்பனையாளர்களும் அவரை வரவேற்று, காரை டெலிவரி கொடுத்திருக்கின்றனர். ஆகையால், முழுக்க முழுக்க சொகுசு கார் சிறுவனால் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.
இந்த சம்பவத்தின் அனைத்து காட்சிகளும் அடங்கிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவை ஒரு சிலர் பாராட்டியும், ஒரு கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர். இதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதினான்கே வயதான ரிவா அரோரா ஆடி க்யூ3 சொகுசு காரை பரிசாக பெற்றார்.
குழந்தை நட்சத்திரமான ரிவா அரோராவிற்கு இந்த காரை அவரது தாயே பரிசாக வழங்கினார். சொகுசு காரின் மதிப்பு ரூ. 44.89 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை பெற்றதன் வாயிலாக இந்தியாவின் முதல் மிகவும் இளமையான க்யூ3 சொகுசு கார் உரிமையாளர் என்கிற புகழுக்குரியவராக ரிவா அரோரா மாறினார்.
இந்த நிலையிலேயே சுமார் 1.29 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்ப காரின் இளம் உரிமையாளராக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி மாறி இருக்கின்றார். இவரிடம் லைசென்ஸ்கூட இருக்குமா?, இல்லையா?, என்றுகூட தெரியவில்லை. அதற்குள்ளாக காரை அவரே டெலிவரி பெற்று ஓட்டிச் சென்றிருக்கின்றார். இதை முன்னிறுத்தியே நெட்டிசன்கள் சிறுவனை கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
அதிக திறனை வெளியேற்றக் கூடிய ஓர் ஆடம்பர வசதிகள் கொண்ட காரே மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 900 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மோட்டாருடன் இணைக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டு மக்கள் மத்தியில் பப்ளிசிட்டி மோகம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய ஓர் நபராகவே இந்த சிறுவன் காட்சியளிக்கின்றார். சமூக வலைதளத்தில் கிடைக்கும் ஒரு சில லைக்குகளுக்காகவே இந்த சொகுசு காரை அவர் வாங்கி இருக்கின்றார். மேலும், இதுகுறித்த வீடியோவை இணையத்திலும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications