ஹைட்ரஜனில் ஓடும் டொயோட்டா கார் வெளியீடு! ஒரு முறை சிலிண்டரை ஃபில் பண்ணா 600 கிமீ போகலாமா!..

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota) அதன் ஹைட்ரஜனில் ஓடும் வாகனத்தை உலக நாடு ஒன்றில் வெளியீடு செய்திருக்கின்றது. அது எந்த கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது? அந்த காரின் சிறப்புகள் என்ன? மேலும், எந்த நாட்டில் அது வெளியீடு செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களைக் காணலாம், வாங்க.

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஹைலக்ஸ் (Hilux)-ம் ஒன்றாகும். இது ஓர் பிக் அப் டிரக் (Pick Up Truck) ரக வாகனமாகும். உலக அளவில் இந்த பிக்-அப் ட்ரக்கிற்கு மிக பெரிய அளவில் ஃபேன் பட்டாளம் உண்டு.

hydrogen powered hilux pick up front

இந்த கார் மாடலையே ஹைட்ரஜன் ஃப்யூவலில் இயங்கும் வாகனமாக உருவாக்கி, அதை ஓர் நாட்டில் தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது, டொயோட்டா. இங்கிலாந்து நாட்டிலேயே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடக் கூடிய ஹைலக்ஸை டொயோட்டா வெளியீடு செய்திருக்கின்றது. பல ஆண்டுகளாக இதன் உருவாக்க பணிகள் நடைபெற்று வந்தநிலையில் இப்போதே அதை டொயோட்டா வெளியீடு செய்திருக்கின்றது.

இதன் வெளியீட்டு நிகழ்வு இங்கிலாந்தில் உள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலையில் வைத்தே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த கார் முன் மாதிரி மாடலாக மட்டுமே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதைபோல இன்னும் பல கார் மாடல்களை அது வெளியீடு செய்ய இருக்கின்றது.

hydrogen powered hilux pick up platform

ஒட்டுமொத்தமாக 9 கான்செப்ட் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அது வெளியீடு செய்ய இருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடக் கூடிய காரை உருவாக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்த நிறுவனம் மிராய் எனப்படும் ஹைட்ரஜனில் ஓடக் கூடிய காரின் தயாரிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த காரை ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் அது விற்பனைக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மிராய் காரில் பயன்படுத்தப்படும் எந்திரமே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் ஹைலக்ஸில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எந்திரம் எந்த நிலையிலும் காற்றை மாசுபடுத்தும் கார்பனை வெளியிடாது.

Toyota hydrogen powered hilux pick up engine

மாறாக அதில் இருந்து வெறும் தூய நீராவி மட்டுமே வெளியேறும். இதுவே இந்த காரின் சிறப்பாகும். அதேவேளையில், இதுவும் ஓர் எலெக்ட்ரிக் வகை காரே ஆகும். ஆமாங்க, ஹைட்ரஜனை ஃப்யூவல் செல்லை அது மின்சாரமாக மாற்றி அதையே இந்த கார் தன்னுடைய இயக்கத்திற்கு பயன்படுத்தும்.

ஒரு முறை முழுமையாக ஃப்யூவல் செல்லை நிரப்பினால் சுமார் 587 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரில் ஹைட்ரஜனில் ஃப்யூவல் செல்லை நிரப்ப அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளாது. ஓர் சிஎன்ஜி வாகனத்தில் அதன் சிலிண்டர்களை முழுமையாக எடுத்துக் கொள்ளும் நேரமே இதற்கும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

hydrogen powered hilux pick up rear

டொயோட்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் ஹைலக்ஸ்கார் மாடலின் டீசல் மோட்டார் தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 2.8 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இருப்பதால் இதன் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வெர்ஷனும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகை இப்போது வரை உறுதிச் செய்யப்படவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் கட்டாயம் இந்த வாகனத்தை டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதைப் போலவே டொயோட்டா அதன் 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் வாகனங்களையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த நிறுவனம் அதன் 100 சதவீதம் (1 துளிகூட பெட்ரோல் தேவைப்படாத) இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி ரக காரை வெளியீடு செய்ததது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை போலவே மின்சாரம் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைபோலவே எதிர்காலத்தில் எத்தனால் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடக் கூடிய வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 8, 2023, 21:45 [IST]
English summary
Hydrogen powered toyota hilux revealed in uk
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X