சாலையில் தென்பட்ட ஹூண்டாயின் குட்டி கார்! விலை இவ்ளோதானா! டாடாவை பஞ்சர் ஆக்கறதுக்காகவே களத்துல இறக்கறாங்க!

இந்திய சந்தையில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் மைக்ரோ எஸ்யூவி (Mini SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

டாடா பன்ச் (Tata Punch) இதற்கு ஒரு உதாரணம். இதற்கு போட்டியாக புதிய மினி எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் ஏஐ3 (Hyundai Ai3) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது.

சாலையில் தென்பட்ட ஹூண்டாயின் குட்டி கார்! விலை இவ்ளோதானா! டாடாவை பஞ்சர் ஆக்கறதுக்காகவே களத்துல இறக்கறாங்க!

டாடா பன்ச் மட்டுமல்லாது, நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும். ஹூண்டாய் நிறுவனம் தனது தாய் நாடான தென் கொரியாவில் புதிய மினி எஸ்யூவி காரை நீண்ட காலமாக சோதனை செய்து கொண்டுள்ளது.

இந்த சூழலில் இந்திய சாலைகளிலும் இந்த புதிய காரின் சோதனை ஓட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 5 சீட்டர் கார் ஆகும். அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள், இந்த புதிய கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலையில் தென்பட்ட ஹூண்டாயின் குட்டி கார்! விலை இவ்ளோதானா! டாடாவை பஞ்சர் ஆக்கறதுக்காகவே களத்துல இறக்கறாங்க!

சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper) காரின் ஒரு சில அம்சங்கள், ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரிலும் இடம்பெறலாம். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரில் சன்ரூஃப் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர 6 ஏர்பேக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் (Features), ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் தென்பட்ட ஹூண்டாயின் குட்டி கார்! விலை இவ்ளோதானா! டாடாவை பஞ்சர் ஆக்கறதுக்காகவே களத்துல இறக்கறாங்க!

இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) கார் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஹூண்டாய் ஏஐ3 காரும் கட்டமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்படலாம்.

அதிகபட்சமாக 83 பிஎஸ் பவர் மற்றும் 113.8 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி கார், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்த காரின் பக்கவாட்டு பகுதியை நம்மால் காண முடிகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதிகாரப்பூர்வமான விலை, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அறிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இப்படி விலை குறைவான ஒரு காரை இந்திய சந்தையில் களமிறக்கியே ஆக வேண்டிய கட்டாயம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு தற்போது உள்ளது. ஏனெனில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி தொடர்ந்து கையில் வைத்துள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது கடுமையான போட்டியை வழங்க தொடங்கியுள்ளது. எனவே ஏஐ3 மினி எஸ்யூவி காரை குறைவான விலையில் அறிமுகம் செய்வதன் மூலம், விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி கொள்வதுடன், ஹூண்டாய் நிறுவனத்தால் தனது 2வது இடத்தையும் தக்க வைத்து கொள்ள முடியும்.

Source: Autocar India

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 16:20 [IST]
English summary
Hyundai ai3 spotted in india expected price features specifications
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+