புக்கிங் கொட்டோ கொட்டுனு கொட்ட போகுது... செம்ம சூப்பரான மோட்டாருடன் புதிய அல்கஸார் அறிமுகம்...

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் அல்கஸார் (ALCAZAR)-ம் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலிலேயே புதிதாக 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் மோட்டார் (1.5 Turbo GDi Petrol Engine) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

விரைவில் அமலுக்கு வர இருக்கும் ஆர்டிஇ விதி (RDE compliant)-க்கு ஏற்ற மோட்டார் இது ஆகும். மேலும், இ20 (E20) எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரை இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும். 7 டிசிடி மற்றும் 6 எம்டி ஆகியவையே அவை ஆகும்.

அல்கஸார்

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட அல்கஸார் எஸ்யூவி-யையே இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. ரூ. 25 ஆயிரம் முன்தொகையில் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த காரை புக் செய்து கொள்ளலாம்.

இந்த மோட்டார் மிகவும் த்ரில்லான பயண அனுபவத்தை வழங்கக் கூடியது என ஹூண்டாய் தெரிவித்து இருக்கின்றது. 117.5 kW பவரை அதாவது 160 பிஎஸ் திறனை 5,500 ஆர்பிஎம்மிலும், 253 என்எம் டார்க்கை 1,500 ஆர்பிஎம் முதல் 3,500 ஆர்பிஎம் வரையிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

அல்கஸார்

இத்தகைய பவர்ஃபுல் மோட்டாரே புதிதாக ஹூண்டாய் அல்கஸாரில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மைலேஜ் திறனும் சற்று அதிகம். 7 டிசிடி வெர்ஷன் அதிகபட்சமாக 18 கிமீ மைலேஜையும், 6எம்டி வெர்ஷன் 17.5 கிமீ மைலேஜையும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கும். இந்த மைலேஜ் திறனால் இந்த எஸ்யூவி கார் செக்மென்டில் மிக சிறந்த மைலேஜ் திறன் கொண்ட வாகனமாக அல்கஸார் காட்சியளிக்கின்றது.

இதுதவிர, 1.5 லிட்டர் டீசல் சிஆர்டிஐ மோட்டார் தேர்விலும் அல்கஸார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மோட்டார் 85 kW பவரை, அதாவது, 116 பிஎஸ் திறனை 4,000 ஆர்பிஎம்மிலும், 250 என்எம் டார்க்கை 1,500 ஆர்பிஎம் தொடங்கி 2,750 ஆர்பிஎம் வரையில் வெளியேற்றும்.

அல்கஸார்

இதுவும் மிக சிறந்த மைலேஜ் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்டேட்டின்கீழ் லேசான மாற்றங்களையும் அல்கஸார் காரில் ஹூண்டாய் செய்திருக்கின்றது. அந்தவகையில், புதிய க்ரில்லை இந்த காரில் வழங்கி இருக்கின்றது. அல்கஸார் ஓர் 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

மிகவும் போல்ட் மற்றும் அதிக கட்டுமஸ்தான தோற்றம் கொண்டதாகவும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. படில் லேம்ப் லோகோவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 2023 அப்டேட் வாயிலாக 6 ஏர்பேக்குகள் (டிரைவர், பாசஞ்ஜர், சைடு மற்றும் கர்டைன்), ஐடில் ஸ்டார்ட் மற்றும் கோ அம்சம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அல்கஸார்

கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக அல்கஸார் எஸ்யூவி காரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டர் டிரைவருக்கான திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி என எக்கசக்க பிரீமியம் வசதிகள் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், முன்பைக் காட்டிலும் பலமடங்கு அதிக சிறப்புகள் கொண்ட காராக இந்த பிரமாண்ட எஸ்யூவி அல்கஸார் மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2023, 17:43 [IST]
English summary
Hyundai alcazar launched with new 1 5 turbo gdi petrol engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X