ஆட்டத்தை ஆரம்பித்த ஹூண்டாய்! புது காரின் விலை இவ்ளோதானா! இத கேட்டதும் டாடாவுக்கு குளிர் காச்சலே வந்திருக்கும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டிருக்கும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை ஹூண்டாய் தன்வசம் வைத்துள்ளது.
இந்த சூழலில் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 53,830 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 49,510 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் இந்திய சந்தையில் கார் விற்பனையில் 8.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஹூண்டாய் நிறுவனம், போட்டியாளர்களை எல்லாம் மிரட்டியுள்ளது.
உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாது ஏற்றுமதியிலும் (Export) ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது. நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து 17,605 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 71,435 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. இதுதவிர சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.
இவை மூன்றுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹூண்டாய் க்ரெட்டா, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ஹூண்டாய் வெனியூ, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. மறுபக்கம் ஹூண்டாய் எக்ஸ்டர், மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது.
இதில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போதைய நிலையிலேயே ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. எனவே வரும் மாதங்களிலும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இதன் காரணமாக ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையும் சிறப்பாகவே இருக்கும். ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு, அதன் குறைவான விலைதான் (Price) மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். விலை குறைவானது என்றாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பல்வேறு அதிநவீன வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் ஹூண்டாய் நிறுவனம் கொடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாகவே ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள காரணத்தால், டாடா பன்ச் காருக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்த போகிறது என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








