இந்த பேட்டரி பேக்கைதான் ஹூண்டாய் கிரெட்டா இவி-ல பயன்படுத்த போகுதா!! சேல்ஸ் பிச்சுக்க போகுது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளில் ஒன்றாக கிரெட்டா (Creta) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியர்கள் பிரியமான ஹூண்டாய் கார் மாடல் என இதனைக் கூறலாம்.இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது.
இந்த காரையே எலெக்ட்ரிக் வெர்ஷனில் விரைவில் ஹூண்டாய் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், எப்போது என்கிற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி இந்த கார் 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் அல்லது 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என தெரிகின்றது.

ஹூண்டாய் அதன் கிரெட்டா இவி-யை விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இசிஐ ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா (ICE Facelift Creta)-வை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா வருகின்ற 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த நிலையிலேயே கிரெட்டா எலெக்ட்ரிக் வெர்ஷனில் எந்த மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரம் கசிந்துள்ளது. கிரெட்டா இவி-யில் 45 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேட்டரி பேக் எல்எஜி கெம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த பேட்டரி பேக் அதன் போட்டி கார் மாடல்களைக் காட்டிலும் சற்று குறைவானது ஆகும். அதாவது, கிரெட்டா இவி எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் மாருதியின் வரவிருக்கும் இவிஎக்ஸ்-க்கும் போட்டியாக அமைய இருக்கின்றது.
இசட்எஸ் இவியில் 50.3 kWh பேட்டரி பேக்கும், இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் 48 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை கிரெட்டா இவியில், கோனா இவியில் என்ன மாதிரியான மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றதோ, அதே மோட்டாரே இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 138 எச்பி பவரையும், 255 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இப்போதையே நிலவரப்படி ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கோனா இவி மற்றும் ஐயோனிக் இவி போன்ற பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே கிரெட்டா இவி வாயிலாக அது மாஸ் மார்க்கெட்டிலும் களமிறங்க இருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா இவி-யில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 350 கிமீ முதல் 400 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கும்.
ஆகையால், இதன் வருகை நாட்டின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான் எஸ்யூவிக்கும் போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளையில், இதன் வருகையால் நெக்ஸானின் விற்பனை பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்காது என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வருகை நேரடியாக மாருதி இவிஎக்ஸ் மற்றும் எம்ஜி அஸ்டர் ஆகியவற்றிற்கு இருக்கும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹூண்டாய் அதன் புகழ்பெற்ற கிரெட்டா இவி எஸ்யூவி வாயிலாக இந்திய மின்சார கார் பிரிவில் நுழைய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் கோனா இவி மற்றும் ஐயோனிக் இவி ஆகியவற்றை விற்பனைச் செய்தாலும், இந்த கார்களை இந்தியர்கள் அனைவராலும் நுகர முடியதாக இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








