எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா! டாடா, மாருதிக்கு தூக்கம் போச்சு! யாரும் எதிர்பாக்காத அதிரடி!

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை, அமோகமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டே வருவதால், பல்வேறு நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்று.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கோனா என்ற எலெக்ட்ரிக் காரை (Hyundai Kona Electric) விற்பனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) என்ற எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இது இந்திய சந்தைக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரின் விலை எவ்வளவு? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படலாம்.

எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா! டாடா, மாருதிக்கு தூக்கம் போச்சு! யாரும் எதிர்பாக்காத அதிரடி!

கெத்தாக வருகிறது ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார்!

இதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் (Hyundai Creta EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனைதான் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போ விற்பனைக்கு வரும்?

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் SU2i EV என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள், வரும் 2024ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் (2025 Auto Expo), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா! டாடா, மாருதிக்கு தூக்கம் போச்சு! யாரும் எதிர்பாக்காத அதிரடி!

விலை எவ்வளவு இருக்கும்?

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் - 25 ஆயிரம் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ய வேண்டுமானால், விலையை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். யூகங்களின் அடிப்படையில் பார்த்தால், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 25-30 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். இந்த விலைக்கு ஏற்ப, ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்ய கூடிய தூரம்) மற்றும் வசதிகள் ஆகியவை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, டாடா, மஹிந்திராவுக்கு செக்!

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. YY8 என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது. இதுதான், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். இதுதவிர டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் இதேபோன்ற தயாரிப்புகளுக்கும், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம்.

வரும் 2028ம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, தரமான ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கலாம் என யோசித்து கொண்டிருப்பவர்கள், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2023, 14:13 [IST]
English summary
Hyundai creta ev india launch details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+