எல்லாருக்கும் பிடித்த கிரெட்டா காரில் இவி வெர்ஷன் தயார்! விலையைக் கேட்ட இப்பவே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்ட இவி காரை சென்னை புறநகர்ப் பகுதியில் டெஸ்ட் செய்து வருகிறது. இந்த கார் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது? இதன் விலை என்ன? உள்ளிட்ட பல விபரங்களை வரிசையாகக் காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் மெல்ல மெல்ல தனது தயாரிப்புகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஹூண்டாய் கோனா என்ற பிரிமியம் எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் சிறப்பாகச் செயல்படும் டாடா நிறுவனத்தின் கடும் போட்டியைக் கொடுக்க தனது கிரெட்டா காரின் இவி வெர்ஷனை உருவாக்கும் முயற்சியில் ஹூண்டாய் இறங்கியுள்ளது.

எல்லாருக்கும் பிடித்த கிரெட்டா காரில் இவி வெர்ஷன் தயார்! விலையைக் கேட்ட இப்பவே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

தற்போது உள்ள கிரெட்டா காரின் இவி வெர்ஷனை கிரெட்டா இவி புரோட்டோ டைப் காராக ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கார் சென்னை புறநகர்ப் பகுதியில் டெஸ்டிங்கில் ஈடுபட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ரஷ்லேன் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த போது ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவி காரை 2025ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் தயாரிப்புகளை 2024ம் ஆண்டு துவங்கவுள்ளது.

இந்த காருக்கு ஹூண்டாய் தற்போது கோட் பெயராக எஸ்யூ2ஐ இவி என வைத்துள்ளது. சென்னையில் டெஸ்டிங்கில் இருந்த இந்த இவி புரோட்டோ டைப் காரில் கீழ்ப் பகுதி பெரியதாக இருந்தது இது பேட்டரி பேக்கிற்காக மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த கார் ஒரு இவி சார்ஜிங் ஸ்டேஷன் பக்கம் நிற்கும் போது சிலரது கண்ணில் சிக்கியுள்ளது. இதனால் தான் கிரெட்டவின் இவி கார் இது என்பது தெரியவந்தது.

எல்லாருக்கும் பிடித்த கிரெட்டா காரில் இவி வெர்ஷன் தயார்! விலையைக் கேட்ட இப்பவே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

இந்த காரில் உள்ள மோட்டார் மற்றும் பேட்டரி பேக் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. தற்போது தெரியவந்த ஒரே விஷயம் ஹூண்டாய் கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு இவி காரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது என்பது தான். இந்த காரை அந்நிறுவனம் 2025ம் ஆண்டு வெளியிடும். தற்போது ஹூண்டாய் கிரெட்டாவில் ஐயானிக் 5 மற்றும் கோனா இவி ஆகிய இரண்டு இவி கார்கள் மட்டுமே உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்திடம் இவி கார்களை தயாரிக்க இ-ஜிஎம்பி பிளாட்ஃபார்ம் இருக்கிறது. இதைச் சர்வதேச மார்கெட்டிலிருந்து முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கும்படியான பிளாட்ஃபார்மாக மாற்ற முயன்று வருகிறது. இதற்காகத் தான் 2024ம் ஆண்டு வரை இதன் தயாரிப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இப்படியாக முழுவதுமாக இந்தியாலேயே தயாரிக்கும்படி இந்த பிளாட்ஃபார்ம் மாறிவிட்டால் இந்த காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

இந்த கார் விற்பனைக்கு வரும் போது இந்த காருக்கு போட்டியாக மார்கெட்டில் மாருதி இவிஎக்ஸ் எஸ்யூவி இவி கார், மற்றும் கியா செல்டோஸ் இவி கார் ஆகிய விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையை வைத்துக் கணிக்கும் போது ஹூண்டாய் இவி கார் மார்கெட்டிற்கு வந்தால் ரூ15-30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் அடுத்தடுத்து சில புதிய கார்களை களம் இறக்கவுள்ளது. அடுத்த மாதம் மார்ச் 21ம் தேதி புதிதாக ஹூண்டாய் வெர்னா என்ற காரை களம் இறக்குகிறது. 1.5 லிட்டர் டர்போ மற்றும் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் கொண்ட காராக அது இருக்கும். இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் ஹூண்டாய் மற்றும் கியா மாடல் கார்களில் இருக்கிறது. கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களில் இந்த இன்ஜின் இருக்கிறது. இது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளது.

இவிகளை பொறுத்தவரை ஹூண்டாய் பெரிய திட்டத்துடன் இருக்கிறது. தற்போது கோனா இவி , மற்றும் ஐயானிக்5 ஆகிய கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்தாலும், 2028ம் ஆண்டு இந்நிறுவனம் மொத்தம் 6 எலெக்ட்ரிக் கார்களை மார்கெட்டில் களம் இறக்கத் தயாராகி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்ட இவி கார். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 12:40 [IST]
English summary
Hyundai creta ev spotted in testing near Chennai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+