ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் மீண்டும் சோதனை ஓட்டம்! என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும்.
இதை தொடர்ந்து இந்த தசாப்தத்தின் மத்தியில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை (Hyundai Creta EV) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

இ-ஜிஎம்பி பிளாட்பார்ம் (E-GMP Platform) அடிப்படையில், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஏற்கனவே இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹூண்டாய் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். அனேகமாக வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல், வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அதை தொடர்ந்து அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும். தற்போதைய நிலையில் எஸ்யூ2ஐ இவி (SU2i EV) என்ற குறியீட்டு பெயரில், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் அழைக்கப்பட்டு வருகிறது.

ஐசி இன்ஜின் வெர்ஷனுக்கும், எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் இடையே நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். கடந்த ஏப்ரல் மாத கடைசியில், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. சுமார் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை தற்போது மீண்டும் இந்திய சாலைகளில் சோதனை செய்து கொண்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX), கியா செல்டோஸ் (Kia Seltos) அடிப்படையில் உருவாகும் எலெக்ட்ரிக் கார், மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) அடிப்படையில் உருவாகும் எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களுடன், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.
ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அத்தனை மாடல்களும் வரும் காலங்களில்தான் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் இந்த செக்மெண்ட்டில் முன்னணி நிறுவனங்களுக்கு இடையே போட்டி அனல் பறக்கும் என்பது உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தற்போது கிடைத்து கொண்டிருப்பதை போன்ற வரவேற்பு, அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் கிடைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








