ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா! சந்தோஷத்துல கையும் ஓடல... காலும் ஓடல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் மற்றும் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் ஆகிய கார்களின் இந்திய அறிமுகம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்வோம்.

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா! சந்தோஷத்துல கையும் ஓடல... காலும் ஓடல!

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரையில், டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன்படி முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர் ஆகியவை வழங்கப்படலாம். இதுதவிர எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் செவ்வக வடிவ ஹெட்லேம்ப்கள் ஆகியவையும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா! சந்தோஷத்துல கையும் ஓடல... காலும் ஓடல!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் புதிய கார்களில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளின் தொகுப்புதான் அடாஸ். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர அப்டேட் செய்யப்பட்ட ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதியும், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படவுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் இந்த புதிய மாடலில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் நடப்பு 2023ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரும் 2024ம் ஆண்டுதான் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கு ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், அதன் பவர்ட்ரெயின் பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. எனினும் இந்த காரில், 39.2 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 425 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடியதாக இருக்கலாம். ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 12:11 [IST]
English summary
Hyundai creta facelift electric car india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+