வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய ஹூண்டாய்! இதை நெனச்சு கவலைப்பட்றதா? இல்ல சந்தோஷப்பட்றதா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவிலேயே, ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலைகளை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்ததுடன், ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரையும் காட்சிப்படுத்தியது. இருப்பினும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய ஹூண்டாய்! இதை நெனச்சு கவலைப்பட்றதா? இல்ல சந்தோஷப்பட்றதா?

என்னங்க இப்படி ஆயிருச்சு!

இந்த சூழலில், அவர்களுக்கு மேலும் ஒரு ஏமாற்றமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளது. அதாவது நடப்பு 2023ம் ஆண்டில், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. அடுத்த 2024ம் ஆண்டில்தான், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

என்ன ஆச்சு?

இந்தோனேஷிய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய சந்தைக்கு என முற்றிலும் வேறுபட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய அறிமுகம் தள்ளி போய் கொண்டிருப்பதற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய ஹூண்டாய்! இதை நெனச்சு கவலைப்பட்றதா? இல்ல சந்தோஷப்பட்றதா?

லேட்டா வந்தாலும் லேட்டாஸ்ட்டா வரும்!

ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன? என்பது குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும் இந்த புதிய மாடல், புதிய பம்பர்கள், புதிய முன் பக்க க்ரில் அமைப்பு, புதிய டெயில்லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றை பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றையும் இந்திய சந்தைக்கான ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் பெற்றிருக்கலாம்.

இந்த வசதியும் இருக்கா!

இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலான மாடல்களில் அடாஸ் தொழில்நுட்ப வசதி வழங்கப்படும் என்பதையும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இதன்படி அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள அடுத்த தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில், அடாஸ் தொழில்நுட்ப வசதி வழங்கப்படவுள்ளது. இந்த வரிசையில் இந்திய சந்தைக்கான ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும், அடாஸ் தொழில்நுட்ப வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்ஜின்!

இதுதவிர தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. நல்ல மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனுடன், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த புதிய இன்ஜின் அதிகபட்சமாக, 160 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போடு... இதெல்லாம் வேற இருக்கா!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர 115 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 115 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த 3 இன்ஜின்களும், வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 ஸ்டேஜ் 2 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.

கொஞ்சம் வெயிட் பண்ணிதான் ஆகணும்!

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய அறிமுகம் தாமதமாவதால் கவலைப்படுவதா? அல்லது இந்திய சந்தைக்கு என முற்றிலும் வேறுபட்ட மாடல் வரப்போகிறது என்பதை நினைத்து சந்தோஷப்படுவதா? என்ற குழப்பமான மனநிலையில் தற்போது வாடிக்கையாளர்கள் உள்ளனர். எப்படியாயினும், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக காத்து கொண்டிருப்பவர்கள், இன்னும் 1 வருடத்திற்கு 'வெயிட்' பண்ணிதான் ஆகணும்!

Most Read Articles
English summary
Hyundai creta facelift india launch delay
Story first published: Friday, January 20, 2023, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X