இந்தியாவே எதிர்பார்த்த காரின் அறிமுக தேதி வெளியானது! உடனே பணத்தை ரெடி பண்ணி வையுங்க!

இந்தியாவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹூண்டாய் கிரெட்டா காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுக தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார்களை மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

hyundai creta facelift launch

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான காராக ஹூண்டாய் கார் தான் இருக்கிறது. இந்த கார் முதல் முதலாக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு இதன் 2ம் தலைமுறைக்கான அறிமுகமான நிலையில் தற்போது இந்த கார் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த காரை தற்போது ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் டெஸ்ட் செய்வதை நம்மால் ஸ்பை புகைப்படங்களில் காண முடிகிறது.

8 ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வரும் இந்த காரின் அடுத்த பேஸ்லிஃப்ட் அப்டேட் குறித்து மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இரண்டாம் தலைமுறை அப்டேட்டிற்கு பிறகு ஹுண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரில் பெரிய அளவில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. இதனால் இந்த அப்டேட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாம் இடம்பெறும் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

hyundai creta facelift launch

நமக்கு கிடைத்த தகவலின் படி ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய காரில் முன்பக்க கிரில் பகுதியை மறுபடியும் அமைத்து செய்துள்ளது மேலும் எல்இடி ஹெட்லைட்டை ஷார்ப்பாக வழங்கியுள்ளது. பம்பரையும் அப்டேட் செய்துள்ளது. மேலும் பானட் பகுதியை மறுபடியும் செய்து அதிக ஏர்டேக் கொண்ட பகுதியாக மாற்றியுள்ளது.

இதுபோக புதிய டிசைனில் அலாய் விலை மாற்றியுள்ளது. கனெக்டெட் எல்இடி டெயில் லைட் மற்றும் மறுபடியும் செய்யப்பட்ட டெயில் கேட் மற்றும் பம்பர் ஆகிய இந்த காரில் இடம் பெற்றுள்ளன. ஹூண்டாய் மற்றும் எக்ஸ்ட்ரா ஆகிய காரின் டிசைன்களை இன்ஸ்பயர் செய்த இந்த புதிய கரெக்டா கார் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

hyundai creta facelift launch

காரின் அளவுகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காரின் வீல் பேஸ் மற்றும் பூட் வசதி ஆகியவற்றில் மிகச் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் அப்டேட் செய்யப்பட்டு புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடைமென்ட் ஸ்கிரீன் பொருத்தப்படும் சிஸ்டத்துடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்கில் இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வெளியான ஹுண்டாய் வெர்னா கார் சமீபத்தில் குளோபல் என்கேப் பாதுகாப்பு ரேட்டிங்கில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அதேபோல இந்த காரும் கிராஸ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை தற்போது உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக கூடுதலாக புதிய 1.5 லிட்டர் டர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாகவும் இது 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வருகிறது.

ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கலை ஒட்டி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான புக்கிங் மற்றும் விலை குறித்த விபரங்கள் எல்லாம் அன்று தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் டீலர் ஷிப்புகளில் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் துவங்க வாய்ப்பு உள்ளது. இந்த கார் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹுண்டாய் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வைத்துள்ளது. இந்நிறுவனம் கிரெக்டா அறிமுகப்படுத்தியது. முதல் இந்த காருக்கும் இந்த நிறுவனத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்த பெயரை காப்பாற்றும் வகையில் இந்த அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்படுவதால் இந்த காரின் விலை தற்போது விற்பனையாகும் காரை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2023, 21:29 [IST]
English summary
Hyundai creta facelift launch date details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X