எழுதி வெச்சுக்கோங்க... இந்த கார் மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது... சம்பவத்திற்கு நாள் குறித்த ஹூண்டாய்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இந்திய சந்தையில் மிகவும் சவால் நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-Size SUV) செக்மெண்ட்டில், ஹூண்டாய் க்ரெட்டா கார் போட்டியிட்டு வருகிறது.

கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுடன், ஹூண்டாய் க்ரெட்டா கார் போட்டியிட்டு கொண்டுள்ளது.

Hyundai Creta

இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் ஜனவரி 16ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்த வரையில், தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Hyundai Creta Front View

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படும் என நாங்கள் கருதுகிறோம்.

இதில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) வசதி மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய அப்ஹோல்ஸ்டரி, ரீ-டிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு மற்றும் 360 டிகிரி கேமரா சிஸ்டம் போன்றவையும், 2024 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கியமான வசதிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா இந்திய சந்தையில் ஏற்கனவே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு கார்தான். இந்த சூழலில், பல்வேறு அப்டேட்களுடன் புதிய மாடல் வரவுள்ளதால், ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

ஆனால் தற்போது உள்ள மாடலை காட்டிலும், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப விலை 10.87 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.20 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரும் விலை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 23:57 [IST]
English summary
Hyundai creta facelift launch date january 16 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+