இந்த மிக மிக அழகான கருப்பு நிற காரை இந்தியர்களால் வாங்கவே முடியாது.. அவங்கள நெனச்சா ரொம்ப பொறாமையா இருக்குங்க!

இந்தியர்களின் மிகவும் ஃபேவரிட்டான கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) இருக்கின்றது. இந்திய கார் பிரிவில் பன்முக மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற போதிலும் இந்த மாடலுக்கு மட்டும் தனித்துவமான டிமாண்ட் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்திய புள்ளி விபரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

இதேமாதிரியான வரவேற்பையே உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த கார் மாடல் பெற்று வருகின்றது. குறிப்பாக பிரேசில் சந்தையில் ஹூண்டாய் கிரெட்டாவிற்கு வரவேற்பு சற்று பலமாகக் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா என் லைன் (Hyundai Creta N Line)-ஐ அந்நாட்டு சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

கிரெட்டா என் லைனில் நைட் எடிசன்

இந்த பதிப்பிற்கும் வரவேற்பு பல மடங்கு அதிகமாக காணப்பட்டிருக்கின்றது. ஓர் வெற்றி கரமான வாகனமாகவே ஹீண்டாய் என் லைன் அந்நாட்டில் மாறி இருக்கின்றது. இத்தகைய வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஹூண்டாய் நிறுவனம் இந்த மாடலை மேலும் சிறப்பிக்கும் விதமாக இதே கிரெட்டா என் லைனில் நைட் எடிசன் (Hyundai Creta N Line Night Edition) எனும் புத்தம் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.

ஏற்கனவே மிகுந்த கவர்ச்சியான தோற்றம் கொண்ட காரை இன்னும் கூடுதல் கவர்ச்சியானதாக அலங்கரித்து ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் இந்த காரை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கின்றது.

கிரெட்டா என் லைனில் நைட் எடிசன்

900 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அறிமுக விலையாக 181,490 ரியால்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 29 லட்சம் நிர்ணயம் செய்யப்ப்டடு உள்ளது. இத்தகைய உயரிய விலையிலேயே ஹூண்டாய் கிரெட்டா என் லைன் நைட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இதை வாங்க போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான கிரெட்ட என் லைன் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 157 பிஎச்பி பவரையும், 188 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

கிரெட்டா என் லைனில் நைட் எடிசன்

இதே மோட்டாரில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வெர்சனும் வழங்கப்படுகின்றது. அது, 167 பிஎச்பி பவரையும், 202 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. கியர்பாக்ஸ் தேர்வை பொருத்தவரை 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா என் லைன் நைட் எடிசனில் பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி இருக்கின்றது.

அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை அது வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக அடாப்டீவ் ஆட்டோ பைலட், லேன் அசிஸ்ட் வசதி, ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் வசதி உடன் கூடிய கொள்ளிசன் அலர்ட் அம்சம் ஆகியவை பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிரக மிக சூப்பரான பார்வை திறன் கொண்ட கேமிராக்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

கிரெட்டா என் லைனில் நைட் எடிசன்

முன்னதாக கூறியதைப் போல் இது ஓர் நைட் எடிசன் என்பதால் காரின் பெரும்பாலான அணிகலன்கள் மற்றும் முக்கிய கூறுகள் அடர் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உட்புறத்திலும் இதனை காண முடிகின்றது. இருக்கை, கியர் லிவர், உட்பக்க மேல்பகுதி, உட்பக்க கதவு என அனைத்திலும் இந்த நிறத்தை நம்மால் காண முடிகின்றது.

முழு கருப்பு நிற பிரியர்களை இந்த நைட் எடிசன் நிச்சயம் கவர்ந்திழுக்கும். இந்த காரில் அதிகம் அழகு சேர்க்கும் அம்சங்களாக என் லைன் பம்பர்கள், முன் பக்கத்தில் கருப்பு நிற குரோம், இரட்டை எக்சாஸ்ட், சைடு ஸ்கர்ட்டுகள் மற்றும் ஸ்பாய்லர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் சில முக்கிய பாகங்களில் இது நைட் எடிசன் என்பதை பிரதிபலிக்கும் வார்த்தைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், மிக மிக கவர்ச்சியான தேர்வாக இந்த கிரெட்டா காட்சியளிக்கின்றது. இந்த காரின் பிரேசில் வருகை உண்மையிலேயே இந்தியர்களை பொறாமை அடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான வெர்ஷனை எல்லாம் இந்தியா கொண்டு வர மாட்டிக்கிறாங்களே என ஏங்க செய்யும் வகையிலேயே இந்த அறிமுக நிகழ்வு அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 9, 2023, 20:29 [IST]
English summary
Hyundai creta n line night edition launched in brazil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X