இனிமே பாக்க முடியாது... பிரபலமான ஹூண்டாய் கார் நம்மை விட்டு பிரிந்தது! எல்லாருக்கும் பிடிச்ச நல்ல காருங்க இது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). ஹூண்டாய் நிறுவன கார்களின் பெயரை கேட்டால், அனேகமாக நிறைய பேர் சொல்லக்கூடிய முதல் பெயர் க்ரெட்டா என்பதாகதான் இருக்கும். க்ரெட்டாவிற்கு பிறகுதான் மற்ற கார்களின் பெயர்களை சொல்வார்கள்.
இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற முக்கியமான போட்டியாளர்களுக்கு விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஹூண்டாய் க்ரெட்டா ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், ஹூண்டாய் க்ரெட்டா காரின் ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படி பண்ணீட்டாங்களே!
ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் லைன்-அப்பில் இருந்து 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை நீக்கியுள்ளது. எனவே ஹூண்டாய் க்ரெட்டா காரின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் (Variants) விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா காரின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது.
இப்ப இந்த இன்ஜின்கள்தான் இருக்கு!
இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டீசல் இன்ஜின் பவர் அவுட்புட் எவ்ளோ?
இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
புதிய அவதாரங்களை எடுக்க போகுது!
தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைத்து வந்தாலும், கூடிய விரைவில் ஹூண்டாய் க்ரெட்டா கார் புதிய அவதாரங்களை எடுக்கும் என கருதப்படுகிறது. ஆம், ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. அதேபோல் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் (EV) ஹூண்டாய் நிறுவனம் எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இதெல்லாம் இருக்கு!
இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' உருவாகியுள்ளது. ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) போன்ற கார்களில் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஹூண்டாய் கோனா (Hyundai Kona) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகிய எலெக்ட்ரிக் கார்களும் அந்நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆதிக்கத்தை அதிகரிக்க திட்டம்!
சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், வரும் காலங்களில் இன்னும் நிறைய சிஎன்ஜி கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை ஆகும். அத்துடன் அவற்றை இயக்குவதற்கும் கூட குறைவான செலவுதான் ஆகும். இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் அவற்றை அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








