கொல மாஸ்! டொயோட்டா இன்னோவாவை வதம் செய்ய வரும் ஹூண்டாய் கார்! இதுல 2 குடும்பங்கள் ஒன்னா உக்காந்து போகலாம்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், வியட்நாமும் ஒன்று. வியட்நாம் சந்தையில் தற்போது புத்தம் புதிய கஸ்டின் என்ற காரை ஹூண்டாய் (Hyundai Custin) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 7 சீட்டர் மாடலாக இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கஸ்டின் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 2.0 லிட்டர் டர்போ ஜிடிஐ மற்றும் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ இன்ஜின்கள் ஆகும்.

இதில் 2.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 236 ஹெச்பி பவர் மற்றும் 1,500-4,000 ஆர்பிஎம்மில் 353 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.2 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் வாய்ந்தது. மறுபக்கம் 1.5 லிட்டர் இன்ஜின், அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 170 ஹெச்பி பவர் மற்றும் 1,500 - 4,000 ஆர்பிஎம்மில் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறன் வாய்ந்தது. சக்தி வாய்ந்த இந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், ஏராளமான வசதிகளும் (Features), ஹூண்டாய் கஸ்டின் காரில் வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் டோர்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த காரின் 2 பக்கத்திலும், வழக்கமான டோர்களுக்கு பதிலாக, ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் டோர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர 2வது வரிசையில், 2 கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 2 இருக்கைகளுக்கும் கூலிங்/ஹீட்டிங் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் தவிர, ட்யூயல் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் ஹூண்டாய் கஸ்டின் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரை வரும் காலங்களில் இன்னும் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பிலிப்பைன்ஸ் ஒன்றாகும்.
பிலிப்பைன்ஸ் சந்தையில் அனேகமாக வரும் அக்டோபர் மாதம், அதாவது அடுத்த மாதம், இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கஸ்டின் காரின் இந்திய அறிமுகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் இந்திய சந்தையில் ஹூண்டாய் கஸ்டின் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், நன்றாக இருக்கும் என்பது இங்குள்ள வாடிக்கையாளர்கள் பலரின் எண்ணமாக உள்ளது.
ஆனால் இந்திய சந்தைக்கு வந்தாலும், இது சற்று விலை உயர்ந்த காராக இருக்கும். அதேபோல் இந்திய சந்தைக்கு வருவதாக இருந்தாலும், இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், ஹூண்டாய் கஸ்டின் கார் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








