இதென்னங்க கார் நண்டு மாதிரி நகருது? இது மாயாஜால வீடியோ கிடையாது! ஹூண்டாயின் புது இ-கார்னர் சிஸ்டம் டெக்னாலஜி!
காரை பார்க்கிங் செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் தனது அயானிக் 5 காரில் இ-கார்னர் சிஸ்டம் என்ற புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழிற்நுட்பம் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
கார் ஓட்டுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த பிரச்சனை காரை பார்க் செய்வது எவ்வளவு கடினமான வேலை என்று. குறிப்பாக இடைஞ்சல்களான இடத்திலும், குறுகிய சாலையிலும் காரை பார்க்க செய்ய வேண்டும் என்றால் அதற்கென ஒரு தனி திறமையே வேண்டும். புதிதாக கார் ஒட்ட கழற்றக்கொண்டவர்கள் காரை பார்க் செய்வது மிகப்பெரிய தலைவலி தான்.

இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் ஒரு புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஹூண்டாய் கார் உதிரிப்பாக தயாரிப்பு அமைப்பான ஹூண்டாய் மொபிஸ் இந்த தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு "இ-கார்னர் சிஸ்டம்ஸ் எனப் பெயரிட்டுள்ளது" அயானிக் 5 காரில் இந்த தொழிற்நுட்பத்தை இன்ஸ்டால் செய்துள்ளது.
இந்த தொழிற்நுட்பத்தில் கார் இயங்கும் வீடியோவை அந்நிறுவனம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதன்படி கார் பார்க்கிங் பிரச்சனை மட்டமல்லாமல் இடைஞ்சல் நிறைந்த பகுதியில் பயணிப்பது, உள்ளிட்ட பல இடங்களிலுள்ள பிரச்சனைகளுக்கு இந்த தொழிற்நுட்பம் தீர்வை தருகிறது எப்படித் தீர்வை தருகிறது என்பதைத் தான் இந்த வீடியோ விளக்குகிறது.

இந்த இ-கார்னர் சிஸ்டம் தொழிற்நுட்பத்தில் காரின் 4 வீல்களையும் 90 டிகிரி வரை திருப்ப முடியும். இதன் மூலம் டைட்டான பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்துவது, காரை 360 டிகிரியில் திருப்புவது, 180 டிகிரியில் திருப்புவது, என காரை எப்படி வேண்டுமானாலும் இருந்த இடத்திலிருந்தே திருப்ப முடியும். இது தான் இந்த தொழிற்நுட்பத்தின் முக்கியமான அம்சம் இன் ஒவ்வொரு பயன்பாடாகப் பார்க்கலாம்.
நண்டு நடை: காரை நீங்கள் டைட்டான இரண்டு கார்களுக்கு இடையே பார்க் செய்ய வேண்டும் என்றால் இந்த நண்டு நடை பார்க்கிங் உதவும். இதில் காரின் 4 வீல்களும் 90 டிகிரி திருப்பு விடும் அதன் வீல் சுற்றி கார் பக்கவாட்டில் நகரும். ஒரு நண்டு எப்படி இருந்த இடத்திலிருந்தே திரும்பாமல் பக்கவாட்டில் நடக்கிறதோ அதே போல இந்த காரும் பக்கவாட்டில் நகரும்.

ஜீரோ திருப்பம் : ஒரு குறுகலான தெருக்குள் நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள் காரை பின்னால் கொண்டு செல்ல வேண்டும் என்றால் தற்போது வரை ரிவர்ஸ் எடுப்பது தான் ஒரே வழியாக இருக்கிறது. ஆனால் இந்த தொழிற்நுட்பம் காரை 360 டிகிரி சுற்றும் வகையில் காரின் 4 வீல்களும் 90 டிகிரி திரும்பியதும், முன்பக்க வீல்கள் வலது பக்கமும், பின்பக்க வீல்கள் இடது பக்கம் சுற்றும் இதனால் கார் இருந்த இடத்திலிருந்தே அப்படியே திரும்பி விடும். ரிவர்ஸ் எடுத்துக் கஷ்டப்படத் தேவையில்லை.
பேவியாட் திருப்பம்: இந்த டெக்னிக்கில் காரின் முன்பக்க வீல் திருப்பாது அப்படியே தான் இருக்கும். ஆனால் பின்பக்க வீல் மட்டும் 90 டிகிரி திரும்பிச் சுற்ற ஆரம்பிக்கும் அப்படி என்றால் காரின் முன்பக்கம் அப்படியே இருக்கும், பின்பக்கம் மட்டும் சுற்றுவதால் நாம் ஒரு பேப்பரில் காம்பஸ் வைத்து வட்டம் வரைவது போல கார் சுற்ற ஆரம்பிக்கும். இது செங்குத்தான நெருக்கடியான பாக்கிங் பகுதியில் காரை பார்க் செய்யப் பயன்படும்.
டயகனல் டிரைவிங்: ஒரு பார்க்கிங் அல்லாமல் கார் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பயன்படுத்தக்கூடிய தொழிற்நுட்பம் கார் ஒரு லேனிலிருந்து மற்றொரு லேனிற்கு உடனடியாக மாற இதைப் பயன்படுத்தலாம். இதில் காரன் 4 வீல்களும் ஒரே திசையில் 45 டிகிரிகள் வரை சாய்வாக மாறும் இதனால் கார் நேராகப் பயணிக்காமல் சற்று சாய்வாகப் பயணிக்கும் இதனால் ஒரு லேனிலிருந்து மற்றொரு லேனிற்கு சுலபமாக மாறிக்கொள்ளலாம். ஆனால் இதைப் பயன்படுத்தும் முன் முறையான பயிற்சி தேவை.
இந்த இணைத்து டெக்னிக்கும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டெமோ வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தொழிற்நுட்பம் சாதாரண கார்களில் பொருத்த முடியாது.மாறாக ஆட்டோமெட்டிக் டிரைவிங் கார்கள், பர்பஸ் பில்டு வாகனங்களில் இந்த இ கார்னர் சிஸ்டம் தொழிற்நுட்பட்டதை பொருத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் இந் இ-கார்னர் சிஸ்டம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாகப் பலர் இந்த தொழிற்நுட்பத்தை ரசித்து இது குறித்துப் பகிர்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் இந்த தொழிற்நுட்பம் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications









