Hyundai Electric Cars ரொம்ப கம்மியான விலையில் வரப்போகுது! டாடா பொருளை எடுத்து டாடாவையே போடணும்!
இந்தியாவில் தற்போதைய நிலையில் டாடா (Tata), மஹிந்திரா (Mahindra), ஹூண்டாய் (Hyundai) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) உள்பட பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் நம்பர்-1 இடத்தில் உள்ளது.
டாடா நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். அத்துடன் டாடா நிறுவனம் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) என நிறைய எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து கொண்டுள்ளது.

மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும். இவை இரண்டுமே விலை உயர்ந்த கார்களாக உள்ளன.
எனவே இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் நிறுவனம் வெளிநாடுகளில் காஸ்பர் (Hyundai Casper) என்ற காரை தற்போது விற்பனை செய்து வருகிறது.

இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. அதேபோல் நடப்பாண்டு இறுதிக்குள் எக்ஸ்டர் (Hyundai Exter) என்ற புதிய காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இந்த 2 எலெக்ட்ரிக் கார்களிலும் 40 kWh பேட்டரி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 300 - 350 கிமீ என்ற அளவில் இருக்கலாம். அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
இருப்பினும் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் விலையும், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் மிகவும் குறைவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹூண்டாய் காஸ்பர் இவி மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) என்ற புதிய எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் ஓரளவிற்கு குறைவான விலையில் வரவுள்ளது. போட்டி நிறுவனங்கள் எல்லாம் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதால்தான், எதிர்காலத்தை மனதில் வைத்து, ஹூண்டாய் நிறுவனமும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற தயாரிப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம்தான், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் அசைக்கவே முடியாத முதலிடத்தை பிடித்தது. அதே பாணியை கையில் எடுக்க தற்போது ஹூண்டாய் நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications