27 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் காரின் விலை இவ்ளோதானா! எதோ பிரியாணி கணக்கா ஆள் ஆளாளுக்கு ஆர்டர் பண்றாங்க!

இந்திய (India) சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). நடப்பு 2023ம் ஆண்டு இந்திய சந்தையில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. 6 லட்சம் கார்கள் விற்பனை (Sales) என்பதுதான் அந்த சாதனை.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2022 காலண்டர் வருடத்தில் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 5.50 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது. இதுதான் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். நடப்பு 2023ம் ஆண்டில் இந்த சாதனையை முறியடித்து, 6 லட்சம் கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Hyundai Exter

ஹூண்டாய் நிறுவனம் புதிய சாதனை படைப்பதற்கு அதன் கார்கள் (Cars) உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்கள் ஏற்கனவே விற்பனையில் தூள் கிளப்பி கொண்டுள்ளன. இவை இரண்டுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவைதான்.

இதில், ஹூண்டாய் க்ரெட்டா காரை ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாங்கி வருகின்றனர். மறுபக்கம் ஹூண்டாய் வெனியூ காரை ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாங்கி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார் தற்போது இணைந்துள்ளது.

Hyundai Exter SUV

ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கடந்த ஜூலை மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. குறைவான விலை (Price) மற்றும் அதிக மைலேஜ் (Mileage) ஆகியவைதான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் வெற்றிக்கு பின்னால் உள்ள ரகசியங்கள்!

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கிறது. இதுதவிர இதே இன்ஜின் சிஎன்ஜி (CNG) மூலம் இயங்கும் வகையிலான ஆப்ஷனும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வெர்ஷனில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான மைலேஜ் உடன் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்படுகின்றன.

எனினும் இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.15 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். குறைவான விலை, நிறைவான மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால், ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு முன்பதிவுகள் (Bookings) குவிந்து வருகின்றன.

1 லட்சம் முன்பதிவுகள் என்ற மைல்கல்லை (Milestone) ஹூண்டாய் எக்ஸ்டர் தற்போது கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் முழுமையாக 5 மாதங்கள் கூட ஆகவில்லை என்னும்போது, ஹூண்டாய் எக்ஸ்டர் காரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புது வரவான ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிறப்பான செயல்பாட்டால், 6 லட்சம் கார்கள் என்ற விற்பனை மைல்கல்லை ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டில் கடந்து சாதனை படைத்து விடும் என்றே நாங்கள் கருதுகிறோம். இது மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகிய போட்டி நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 14:32 [IST]
English summary
Hyundai exter 1 lakh bookings milestone full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+