ஹூண்டாய் எக்ஸ்டரை வாங்கும் ஐடியா இருக்கா? இன்னும் கொஞ்சம் செலவு செய்தால் காருடன் இதையெல்லாம் பெறலாம்!!
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கான ஆக்ஸஸரீகள் அவற்றின் விலைகள் உடன் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வகையில் எக்ஸ்டர் எஸ்யூவி காரின் தோற்றத்தை எவ்வாறு மெருக்கேற்றி கொள்ளலாம்? இதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? என்ற கேள்விக்களுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதன் புதிய மைக்ரோ-எஸ்யூவி காராக எக்ஸ்டரை சமீபத்தில் இந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தியது. ரூ.6 லட்சம் என்கிற கவர்ச்சிக்கரமான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்டர் விற்பனையில் டாடா பஞ்ச், சிட்ரோன் சி3 மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

7 விதமான ட்ரிம் நிலைகளில், 2 என்ஜின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்டர் காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்திற்கான ஆக்ஸஸரீகளை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதன் இணையத்தள பக்கத்தில் விலைகள் உடன் வெளியிட்டுள்ளது. வெளிப்பக்கத்திற்கான ஆக்ஸஸரீகளில் அதிகப்பட்சமாக ORVM-விற்கான பியானோ கருப்பு நிற கார்னிஷுக்கு ரூ.1,499 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பின்புறத்தை காட்டும் காரின் வெளிப்பக்க கண்ணாடிகளுக்கான மூடியை பியானோ கருப்பு நிற கார்னிஷ் உடன் பெறுவதற்கு காரின் விலையுடன் கூடுதலாக ரூ.1,499 செலவிட வேண்டியிருக்கும். இதற்கு அடுத்து, பம்பர் கார்னர் பாதுகாப்புக்கு ரூ.1,399 விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பக்க விண்ட்ஷீல்டிற்கான கார்னிஷ் மற்றும் முன்/பின்பக்க ஸ்கூப் உள்ளிட்டவற்றிற்கு ரூ.1,299 விலை ஆகும்.
| Exterior Accessories | Prices |
| Rear windshield garnish | ₹1,299 |
| Door handle chrome | ₹1,249 |
| ORVM - Piano Black garnish | ₹1,499 |
| Twin hood scoop | ₹999 |
| Door edge guard | ₹399 |
| Front and rear scoop | ₹1,299 |
| Bumper corner protector | ₹1,399 |
| Door finger guard - film | ₹399 |
| Mudguard | ₹329 |

வெளிப்பக்க கதவு கைப்பிடிகளில் க்ரோம் பளபளப்புக்கு ரூ.1,249ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். ட்வின் வுட் ஸ்கூப்பிற்கு ரூ.999 ஆகவும், டோர் எட்ஜ் கார்ட், டோர் ஃபிங்கர் கார்ட்-படலத்திற்கு ரூ.399 ஆகவும், மட்கார்டிற்கான விலையாக ரூ.329 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவைதான், எக்ஸ்டரின் வெளிப்பக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் ஆகும்.
உட்பக்கத்தை பொறுத்தவரையில், அதிகப்பட்சமாக முன் & பின்பக்க விண்டோ சன் ஷேடிற்கு ரூ.2,740 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, சூரிய ஒளியை முழுவதுமாக காருக்குள் நுழைய அனுமதிக்காத விண்டோ சன்ஷேட்களை ரூ.2,740 தொகையை செலுத்தி கார் வாங்கும்போது பெற்று கொள்ளலாம். இந்த சன்ஷேட்கள் யாவும் முன் மற்றும் பின்பக்க ஜன்னல் கண்ணாடிகளுக்கு மட்டுமே ஆகும்.

இதை ஏன் அழுத்தி கூறுகிறோம் என்றால், பின்பக்க விண்ட்ஷீல்டிற்கான சன்ஷேட் ரூ.1,499க்கு ஆக்ஸஸரீயாக தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதிக்கான முப்பரிமாண தரைப்பாய்க்கு ரூ.1,489 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளில் தலையணை குஷின்களை கூடுதலாக பெற ரூ.1,299ஐ கூடுதலாக செலுத்த வேண்டும்.
| Interior Accessories | Prices |
| Front and rear window sunshade | ₹2,740 |
| Rear windshield sunshade | ₹1,499 |
| 3D boot mat | ₹1,489 |
| Scuff-plate (non-illuminated) | ₹1,189 |
| Headrest cushions | ₹1,299 |
காருக்குள் நுழையும்போது வரவேற்கும் விதமாக பதியப்படும் ஸ்கஃப்-தட்டை ரூ.1,189ஐ செலுத்தி பெற்று கொள்ளலாம். ஆனால் இந்த ஸ்கஃப் தட்டு ஆனது ஒளிரக்கூடியது அல்ல என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் மட்டுமில்லாமல், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எக்ஸ்டருக்கு வயர்லெஸ் சார்ஜர், கார் பின் இருக்கை ஆர்கனைசர், ஸ்பீக்கர்கள், காற்று சுத்திகரிப்பான உள்பட சில பொதுவான ஆக்ஸஸரீகளையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார் அதன் காம்பெக்ட்டான, அதேநேரம் ஸ்டைலிஷான தோற்றத்தின் மூலமாக பலத்தரப்பட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எக்ஸ்டருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் எக்ஸ்டர் காரை காட்டிலும் ஸ்டைலாக இந்த காரை வாங்க நினைப்பவர்கள் மேற்கூறப்பட்ட ஆக்ஸஸரீகளையும் கூடுதல் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









