பைக்கை போல் மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்! விலை இவ்ளோதானா! எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக்கிங் பண்றாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மினி எஸ்யூவி (Mini SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரின் டீசர்களை (Teasers) தொடர்ச்சியாக வெளியிட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த கார் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உருமறைப்பு இல்லாத புதிய புகைப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம், ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரின் தரிசனத்தை நமக்கு வழங்கியுள்ளது. அத்துடன் எக்ஸ்டர் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் ஹூண்டாய் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் எக்ஸ்டர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் (Dealerships) மூலமாகவோ அல்லது ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் (Online) மூலமாகவோ எக்ஸ்டர் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்படும்.
அவை EX, S, SX, SX(O) மற்றும் SX(O) Connect ஆகியவை ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி (AMT) கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறவுள்ளன.

இதுதவிர 1.2 லிட்டர் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்படவுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிஎன்ஜி கார்களில் பெரும்பாலும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும்.
எனினும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். ஏனெனில், இந்த இன்ஜின் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும். அனேகமாக ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி மாடல், ஒரு லிட்டருக்கு 28-30 கிமீ மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, எக்ஸ்டர் காரிலும் வசதிகளின் (Features) பட்டியல் அனுமார் வால் போல நீளவுள்ளது. இதில் கனெக்டட் கார் தொழில்நுட்பம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். இது இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அதிகம் எதிர்பார்க்கும் வசதிகளில் ஒன்றாக திகழ்கிறது.
இதுதவிர ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஏர்பேக்குகள் உள்பட இன்னும் பல்வேறு வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் கார், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்போதுதான் இதன் விலை (Price) அறிவிக்கப்படும். எனினும் இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 5.50 அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நேரடி போட்டியாளரான டாடா பன்ச் (Tata Punch) காருக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் வடிவில் மிக கடுமையான சவால் காத்து கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறப்பான மைலேஜ், குறைவான விலை, அட்டகாசமான வசதிகள் ஆகிய காரணங்களால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் கார் என்ற பெருமையை எக்ஸ்டர் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இந்த காரின் வருகை, போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications