போட்றா வெடிய! ஹூண்டாய் களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! கதையே இப்பதான் ஆரம்பிக்குது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் எக்ஸ்டர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 5.99 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர்-டாடா பன்ச் இடையேயான போட்டி தற்போதே மிகவும் தீவிரமாக இருக்கிறது.

Hyundai Exter

வரும் மாதங்களில் இந்த போட்டி இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளது. ஆம், ஹூண்டாய் எக்ஸ்டர்-டாடா பன்ச் ஆகிய 2 கார்களும் எலெக்ட்ரிக் செக்மெண்ட்டிலும் மோதவுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் கார், இந்திய சாலைகளில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே கூடிய விரைவில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். இதை தொடர்ந்து, ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) எலெக்ட்ரிக் காரும் சந்தையில் களமிறங்கவுள்ளது.

Hyundai Exter Bonnet

இதற்கு முன்னோட்டமாக, ஹூண்டாய் நிறுவனம் இந்திய சாலைகளில் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டத்தை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு (Chennai) அருகே ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னைக்கு அருகேதான் செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரில், 25-30 kWh திறனுடைய லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் ரேஞ்ச் (Range) 300-350 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.

பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் ரேஞ்ச் எனப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளோ அல்லது 2024ம் ஆண்டின் தொடகத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கம் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார், 2024ம் ஆண்டின் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரில் பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூயல் கேமரா உடன் டேஷ்கேம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் கார்களான ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகியவை விலை உயர்ந்தவை ஆகும். ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

டாடா பன்ச் இவி மட்டுமல்லாது, டாடா டியாகோ இவி (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் எம்ஜி கோமொட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடனும், ஹூண்டாய் எக்ஸ்டர் இவி விற்பனையில் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 8, 2023, 14:37 [IST]
English summary
Hyundai exter ev expected price range features all details here
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+