ரூ.6 லட்சத்தில் கிடைக்கும் இந்த ஹூண்டாய் காரில் இத்தனை வசதிகளா!! காசை செலவு செய்யாம ஸ்மார்ட்டா யோசியுங்க!
இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் புதியதாக எக்ஸ்டர் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரூ.6 லட்சம் என்ற விலையை கொண்ட எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எஸ்யூவி கார்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் விளங்குகிறது. இதனை தொடர, அவ்வப்போது எஸ்யூவி கார்களை அப்டேட் செய்துவிடும் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்த ஜூலை மாத துவக்கத்தில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இ.எக்ஸ், இ.எக்ஸ் (ஆப்ஷ்னல்), எஸ், எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என்ற 5 விதமான வேரியண்ட்களில் எக்ஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இ.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6 இலட்சம் என மிக குறைவாக, பெரும்பாலான மக்கள் ஏற்கக்கூடியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவான விலையை கொண்ட எக்ஸ்டர் இ.எக்ஸ் வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டெலிவிரிகள் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூம்களை எக்ஸ்டர் கார்கள் வந்தடைய துவங்கியுள்ளன. அவ்வாறுதான், எக்ஸ்டரின் இ.எக்ஸ் வேரியண்ட்களும் ஷோரூம்களுக்கு வர ஆரம்பித்துள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டரின் மற்ற வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில் எண்ட்ரீ-லெவல் இ.எக்ஸ் வேரியண்ட்டில் சில வசதிகள் இல்லை.
இந்த வேரியண்ட் காரின் முன்பக்கத்தில் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் டர்ன் இண்டிகேட்டர்களும் சாதாரணமானவைகளாக உள்ளன. ஆனால் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்களை பெறலாம். முன்பக்க க்ரில் பளபளப்பான கருப்பு நிறத்தில் இல்லாமல், சாதாரண கருப்பு நிறத்திலேயே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேரியண்ட்டில் அலாய் சக்கரங்கள் இல்லை, அளவில் சற்று சிறிய 14-இன்ச் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளிப்பக்க கதவு கைப்பிடிகள், டர்ன் இண்டிகேட்டர்களை கொண்ட ஃபெண்டர்கள், ORVM-கள் மற்றும் சைடு பாடி கிளாடிங்குகள் உள்ளிட்டவை காரின் உடல் நிறத்தில் (வெள்ளை) இல்லாமல், கருப்பு நிறத்தில் உள்ளன. இந்த ஆரம்ப-நிலை வேரியண்ட்டில் ரூஃப் ரெயில்கள் இல்லை.
விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், காரின் உட்பக்கத்தில் 6 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள், என்ஜின் இம்பொளிசர், பார்க்லர் அலார்ம், ஹை-ஸ்பீடு அலார்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைண்டர், செண்ட்ரல் லாக்கிங், இம்பேக்ட் சென்சிங் ஆட்டோ டோர் அன்லாக், கீலெஸ் எண்ட்ரீ, அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட், துணியால் மூடப்பட்ட இருக்கைகள், டிஜிட்டல் பிளாஸ்டர் உடன் வண்ண நிறத்தில் டிஎஃப்டி திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் இந்த லிஸ்ட் முடியவில்லை. வாய்ஸ் ரெகோனிஷன், மேனுவல் ஏசி, முன்பக்க பவர் ஜன்னல் கண்ணாடிகள், ஓட்டுனர் இருக்கையின் உயரம் அட்ஜெஸ்ட்மெண்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க ஹெட்ரெஸ்ட், அதிக எண்ணிக்கையில் வட்டார மொழிகள், ரீடிங் லேம்ப், முன் & பின்பக்க டோர் மேப் பாக்கெட்கள், தரைப்பாய்கள் போன்றவையும் எக்ஸ்டர் இ.எக்ஸ் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.
ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி கார் மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இ.எக்ஸ் வேரியண்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். அதிகப்பட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு இ.எக்ஸ் வேரியண்ட்டில் கிடைக்காது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எக்ஸ்டர் இ.எக்ஸ் வேரியண்ட் காரின் வெளிப்பக்கத்தில் சில அம்சங்கள் இல்லை என்றாலும், காரின் உட்பக்கத்தில் பெரியதாக எந்தவொரு குறையையும் ஹூண்டாய் வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க 6 ஏர்பேக்குகள் எக்ஸ்டர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கி இருப்பது பாராட்டத்தக்கக்கூடிய விஷயமாகும்.


Click it and Unblock the Notifications








