Hyundai Exter காரின் விலை இவ்ளோதானா! டாடாவை காலி பண்ணியே ஆகணும்னு உறுதியா இருக்காங்க! தம்பி கேட்ட மூட்றா!
இந்திய சந்தையில் புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தயாராகி வருகிறது. ஏஐ3 (Ai3) என்ற குறியீட்டு பெயரில், இந்த மைக்ரோ எஸ்யூவி கார் அழைக்கப்பட்டு வந்தது.
ஆனால் இதன் பெயர் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

கே1 பிளாட்பார்ம் (K1 Platform), அடிப்படையில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் உருவாக்கப்படுகிறது. இந்த புதிய காரின் நீளம் 3.8 மீட்டர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஹூண்டாய் எக்ஸ்டர் காரிலும் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படவுள்ளன.
இதன்படி ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகிய வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 81 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.
இதுதவிர 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த இன்ஜின் பவர் அவுட்புட் 120 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க் ஆக இருக்கலாம். இதுதவிர அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனையும் நாம் எதிர்பார்க்கலாம்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு களமிறங்கவுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.50 அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டாடா பன்ச் (Tata Punch) காருடன், ஹூண்டாய் எக்ஸ்டர் நேருக்கு நேராக போட்டியிடும். இதுதவிர (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கும், ஹூண்டாய் எக்ஸ்டர் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது.
மிக முக்கியமான போட்டியாளரான டாடா பன்ச் கார் தற்போதைய நிலையில் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் மிகவும் குறைவான விலையில் வரவுள்ளதால், ஹூண்டாய் நிறுவனத்தின் அளவில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் அதிகம் விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இதன் மூலம் இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தனது 2வது இடத்தை மேலும் வலுவாக்கி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








