டாடாவை நார் நாரா கிழிக்க போகும் விலை குறைவான ஹூண்டாய் கார்! இந்த ரேட்டுக்கு எப்புட்றா! வாயை பிளக்கும் மக்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக, ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் எக்ஸ்டர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வரும் ஜூலை 10ம் தேதி, விலை அறிவிக்கப்பட்டு, ஹூண்டாய் எக்ஸ்டர் கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் வசதிகள் (Features) மற்றும் இன்டீரியர் டிசைன் (Interior Design) தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், லெதர் சுற்றப்பட்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது டில்ட் அட்ஜெஸ்ட் வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த காரின் முதல் மற்றும் 2வது வரிசை இருக்கைகளுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சென்டர் கன்சோலில் செவ்வக வடிவ ஏசி வெண்ட்களும், டேஷ்போர்டின் இரு பக்கமும் வட்ட வடிவ ஏசி வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பின் பக்கத்தில் அமரும் பயணிகளுக்கும் ஏசி வெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே குளிர்ச்சியான பயணம் கிடைப்பது உறுதி.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் உட்புறம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கருப்பு நிற லெதரேட் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன் பக்க இருக்கைகளில் Exter என தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வசதியையும், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் பெற்றுள்ளது.

மேலும் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4.2 இன்ச் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகிய வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஓடிஏ அப்டேட்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரில், அலெக்ஸா மூலம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் குரல் கட்டளைகளையும் வாடிக்கையாளர்கள் வழங்க முடியும்.
செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 82 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் இதே இன்ஜினுடன் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். எனினும் சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும் என நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 28 முதல் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் எக்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் இன்ஜின், வசதிகள் மற்றும் டிசைன் என அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. ஆரம்ப விலையும் கூட வெறும் 5.50 அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இந்திய சந்தையில் புதிய சகாப்தம் படைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









