இந்த காரு எமனையே கூப்பிட்டு வச்சு வெறுப்பேத்தும் போலிருக்கே! இவ்ளோ கம்மி விலை காருல இத்தன பாதுகாப்பு கருவிகளா!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் புதுமுக கார் மாடல் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. எக்ஸ்டர் (Exter) எனும் குட்டி காரையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது மினி எஸ்யூவி ரக கார் ஆகும்.

இந்த காரின் வருகையை ஏற்கனவே நிறுவனம் உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும், மிக சமீபத்திலேயே காருக்கான புக்கிங்குகளை ஏற்கும் பணிகளையும் ஹூண்டாய் தொடங்கியது. இந்த பணிகள் இம்மாதம் 8ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

Hyundai exter 6 airbags dual camera safety

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஹூண்டாய் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் எக்ஸ்டர் காரின் சிறப்புகள் பற்றிய தகவலை அது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரின் மீது இந்தியர்களுக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்ற சூழலில் நிறுவனம் அதனை இரட்டிப்பாக்கும் விதமாக சில முக்கிய தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்போது புதிய தகவலாக, ஆறு ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டு அம்சமாக எக்ஸ்டர் காரில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்ளையும் தன்னுடைய புதுமுக எக்ஸ்டரில் ஹூண்டாய் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இந்த புதிய தகவல்கள் இந்தியர்கள் கவனத்தை கூடுதலாக பெறும் வகையில் அமைந்திருக்கின்றது.

Hyundai exter front view

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் ஹூண்டாய் எக்ஸ்டர் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இஎக்ஸ் (EX), எஸ் (S), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் (ஓ) SX(O) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் SX(O) Connect இவையே எக்ஸ்டரின் ஐந்து வேரியண்டுகள் ஆகும்.

இந்த வேரியண்டுகளில் ஆரம்ப நிலை வேரியண்டாக கருதப்படும் இஎக்ஸ் முதல் கொண்டு எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் வரை அனைத்திலும் ஆறு ஏர் பேக்குகளை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹூண்டாய் வழங்க இருக்கின்றது. அதேவேளையில், ரூ. 5.50 முதல் 6 லட்ச ரூபாய் வரை என்கிற மிகக் குறைவான விலையிலேயே ஹூண்டாய் இந்த காரை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hyundai exter running shot

இதுவே இந்த காரின் மீது எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்க மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதேபோல், அதிக மைலேஜை வழங்கக் கூடிய எஞ்ஜின்களே இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அநத்வகையில், இ20 ரக எரிபொருளில் இயங்கக் கூடிய 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பை-ஃப்யூவல் கப்பா பெட்ரோல்-சிஎன்ஜியில் இயங்கக் கூடிய மோட்டார் தேர்வுகளிலேயே எக்ஸ்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இதில், முதல் மோட்டாரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும், இரண்டாவது மோட்டாரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார்களில் 26 கிமீ முதல் 30 கிமீ வரையில் மைலேஜை எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் வருகை டாடா பஞ்ச் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ளது. எக்ஸ்டர் காரை 6 ஒற்றை நிற தேர்விலும், 3 டூயல் நிற தேர்விலும், இவற்றுடன், காஸ்மிக் ப்ளூ மர்றும் ரேஞ்ஜர் காக்கி ஆகிய நிற தேர்வுகளிலும் விற்பனைக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆறு ஏர்பேக்குகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இஎஸ்சி (Electronic Stability Control), விஎஸ்எம் (Vehicle Stability Management), ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், மும்முனை சீட் மற்றும் சீட் பெல் ரிமைண்டர் (அனைத்து இருக்கைகளுக்கும்), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பர்க்ளர் அலாரம் எனும் புதிய எச்சரிக்கை சிஸ்டம் என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் ஹூண்டாய் வழங்க இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டர் காரை களமிறக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் வருகை மலிவு விலை கார் சந்தையில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 11:49 [IST]
English summary
Hyundai exter gets 6 airbags as standard
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X